வெளிநாடு சென்று திரும்பியவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்; பொதுமக்கள் வெளியே வராமல் ஒத்துழைப்பு தர வேண்டும்- கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க முதல்வர் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

வெளிநாடு சென்று திரும்பிய வர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் நோயின் தன்மை கருதி பொதுமக்கள் வெளியில் வராமல் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி நேற்று காலை பட்டினப்பாக்கத்தில் உள்ள அம்மா உணவகத்துக்குச் சென்று ஆய்வு நடத்தினார். அவருடன் அமைச்சர் டி.ஜெயக்குமார், மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் ஆகியோரும் சென்றனர். அம்மா உணவகத்தின் சமையலறை உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்த முதல்வர், காலை உணவான இட்லி, பொங்கல் ஆகியவற்றை சாப்பிட்டுப் பார்த்தார். உணவு தரமாக சமைக்கப்படுவதை உறுதிசெய்து பணியாளர்களை பாராட்டி னார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் முதல்வர் பேசும்போது, “வேலைக்குச் செல்பவர் களும் ஏழைகளும் மலிவு விலையில் உணவு வாங்கி உண்பதற்காக அம்மா உண வகம் திட்டம் தொடங்கப்பட் டது. இந்தத் திட்டம் தற்போது பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று மக்களுக்கு பயன ளித்து வருகிறது. உலகை உலுக்கும் கரோனா வைரஸ் தொற்று 199 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் பல்வேறு மாநிலங்களில் பரவியுள்ளது. தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர் களின் கேள்விகளுக்கு முதல்வர் அளித்த பதில்கள் வருமாறு:

அம்மா உணவகத்தில் உணவை இலவசமாக அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளதே?

மலிவு விலையில், அதாவது ஒரு இட்லி ஒரு ரூபாய்க்குத்தானே தருகிறோம். நாட்டிலேயே குறைந்த விலையில் இட்லி வழங்குவது தமிழகத்தில்தான். எவ்வளவு உணவு வேண்டுமானாலும் கொடுக்கச் சொல்லியுள்ளோம். இங்கு தினசரி நான்கரை லட்சம் பேர் வந்து சாப்பிட்டு செல்கின்றனர். எவ்வளவு பேருக்கு வேண்டுமானாலும்உணவு தயாரிப்பதற்கு அரசு உத்தர விட்டுள்ளது. மலிவான விலை யில் அம்மா உணவகங்களில் உணவு கிடைக்க அனைத்து நட வடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் 3 மாதங்களுக்கு தவ ணைத் தொகைகளை வசூலிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள் ளது. ஆனால் வங்கிகள் தவணை வசூலிப்பதற்கான குறுஞ்செய்தி களை அனுப்பி வருகிறதே?

மத்திய அரசு சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருப்பதால் மத்திய நிதியமைச்சரின் கவனத்துக்கு இது கொண்டு செல்லப்படும்.

கடந்த 21-ம் தேதி ஈஷா மையத் தில் நடைபெற்ற கூட்டத்தில் பலர் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கு பரிசோதனை நடத்தப்படுமா?

அறிகுறி இருந்தால் சோதனை நடத்தப்பட்டு நோய் கண்டறியப்பட் டால் சிகிச்சை அளிக்கப்படும். இன்று கோயில்கள், தேவாலயங் கள், பள்ளிவாசல்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளது. அதிக அளவில் கூட்டம் கூடும் இடம் என்பதாலும், வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாலும் அவற்றை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. வெளி நாட்டில் இருந்து வந்தவர்கள், இங் கிருந்து வெளிநாடு சென்று திரும்பிய வர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்துவதற்கான மையங்களை அமைக்க அரசியல் கட்சிகள், தனியார் கட்டிடங்களை கொடுக்க முன்வந்துள்ளனர். அவை பயன்படுத்தப்படுமா?

அந்த அளவுக்கான தேவை ஏற்படவில்லை. 17 ஆயிரம் படுக்கை வசதி தற்போது மருத்துவமனைகளில் உள்ளது. அப்படியான சூழல் ஏற்படும்போது பயன்படுத்துவோம்.

ஏப்ரல் 14-ம் தேதிக்குப்பின் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?

மத்திய அரசு 14-ம் தேதி வரை அறிவித்துள்ளது. இதை நீட்டிப்பது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்யும்.

ஊரடங்கு உத்தரவை அமல் படுத்திய நிலையில் பொதுமக்கள் அதிகளவில் வெளியில் சென்று வருகின்றனர். கட்டுப்பாடுகள் குறைந்துள்ளதா?

பொதுமக்கள் நலன்கருதி அனைத்து வகையிலும் முன்னெச் சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு கட்டுப்பாடு களுடன் 144 தடை உத்தரவு பிறப் பிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வரின் உயிரும் முக்கியம். இது தனிப்பட்ட விஷயம் அல்ல. ஒவ்வொருவரும் இதில் பங்கு கொள்ள வேண்டும். அரசு சட்டம் போடலாம். அந்த சட்டத்தை மதித்து மக்கள் நடக்க வேண்டும். சட்டத்தின் நோக்கமே நோய் பரவாமல் இருக்க வேண்டும் என்பதுதான். இதை அனைவரும் உணர வேண்டும். நோயின் தாக்கம் தெரியாமலேயே பொதுமக்கள் பரவலாக வெளியில் செல்கின்றனர். நோய்வாய்ப்பட்டவர்கள் எவ்வளவு துன்பப்படுகிறார்கள் என்பது அனை வருக்கும் தெரியும். பல வெளிநாடு களில் நோயால் பாதிக்கப்பட்டு பலர் துடிதுடிக்கின்றனர். இதுவரை 42 ஆயிரம் பேர் இறந்துவிட்டதாக தகவல் வருகிறது. இப்படி ஆயிரக்கணக்கானவர்கள் தினசரி இறக்கும் சூழலில், 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. பிரதமரும் நாட்டில் உள்ள அனைவரும் கடைப்பிடிக்க அறி வுறுத்தியுள்ளார். மக்கள் பாது காப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் வேண்டுகோள்.

விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்பதில் சிரமம் இருப்பதாக கூறப்படுகிறதே?

விவசாயிகளுக்கு எவ்வித தடையும் இல்லை. அவர்கள் வேளாண் பணியை மேற்கொள்ள லாம். அவர்கள் அறுவடை செய்யும் பொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்லவும் தடையில்லை. உலகமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நோயின் தன்மை கருதி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழகத்தில் ஒருவர் கூட பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பதிலளித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

31 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்