கரோனாவை கட்டுப்படுத்த நிவாரண நிதி; மக்களுக்கு முதல்வர் நாராயணசாமி கோரிக்கை

By செ.ஞானபிரகாஷ்

கரோனாவை கட்டுப்படுத்த மருத்துவ சாதனங்கள் தேவையான சாதனங்கள் வாங்க புதுச்சேரி முதல்வர் நிவாரண நிதியில் தனிக்கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. அதற்கு நிதி தர முதல்வர் நாராயணசாமி கோரியுள்ளார்.

முதல்வர், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை அளிக்கின்றனர்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை இன்று இரவு சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:
புதுச்சேரியில் கொரோனா நோய் தாக்கத்தை கட்டுபடுத்துவதற்காகவும் மருத்துவ சாதனங்கள் வாங்குவதற்காகவும் முதல்வர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய ஒரு மாத ஊதியத்தை முதல்வர் நிவாரண நிதிக்காக அளிக்க உள்ளோம்.

இதற்காக முதல்வர் நிவாரண நிதிக்கு தனிக்கணக்கு தொடங்கியுள்ளோம். அரசு ஊழியர்களும் தங்களுடைய ஒருநாள் ஊதியத்தை வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களும் தங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும். மருந்துகள், மருந்து சாதனங்கள் வாங்க இந்த நிதி பயன்படுத்தப்படும்.

ஏற்கெனவே ரூ. 17.5 கோடி ஒதுக்கியுள்ளோம். வெண்டிலேட்டர், மாஸ்க் உள்ளிட்ட முக்கியமானவை கிடைப்பதில் நாடு முழுவதும் தட்டுப்பாடு நிலவுகிறது. வரும் 31 வரை ஊரடங்கு உத்தரவு இருந்தாலும் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் திறந்திருக்கலாம். அதேபோல் மருந்தகங்களும் திறந்திருக்கலாம்.

அதே நேரத்தில் வரும் 31 வரை தேவையில்லாமல் யாரும் நடமாடக்கூடாது. மீறுபவர்கள்மீது தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மளிகை,பால்,காய்கறி,பழக்கடைகள் திறந்து இருக்கும்..மக்கள் கூட்டமாக செல்ல கூடாது.. பெட்டி கடை,டீக்கடை மூடி இருக்கும். உழவர் சந்தை உட்பட எல்லா சந்தையும் மூடப்படும். பொது மக்கள் முழுமையாக நடமாட்டத்தை நிறுத்தினால் தான் நோயை தடுக்க முடியும் என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

25 mins ago

கருத்துப் பேழை

21 mins ago

சுற்றுலா

58 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

5 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்