கூட்டுறவு வங்கிகளில் ரூ.3 லட்சம் வரை பயிர்க்கடன் பெற சிட்டா, அடங்கல் போதும்: அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவையில் நேற்று நடை பெற்ற விவாதம்:

சவுந்திரபாண்டியன்: திமுக ஆட்சியில், சிட்டா, அடங்கல்வாங்கிக்கொண்டு விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டது. நகைக்கடனும் வழங்கப்பட்டது. மத்திய அரசின் சட்டத்தால் அந்த கடன்கள் விவசாய கடனாக மாற்றப்பட்டு வருகிறது. விவசாயிகள் நிலத்தை பத்திரப்பதிவு செய்தால் மட்டுமே விவசாயக்கடன் பெறும் சூழல் உள்ளது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் விவசாயிகளுக்கு நகைக்கடன் வழங்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

அமைச்சர் செல்லூர் ராஜூ: கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து மார்ச் 3-ம் தேதி வரை 15 லட்சத்து 93 ஆயிரத்து 148 பேருக்கு ரூ.7 ஆயிரத்து 548 கோடியே 54 லட்சம் வரை கடன் வழங்கியுள்ளோம். விவசாயிகளை மத்திய கூட்டுறவு வங்கிகளின் உறுப்பினர்களாக மாற்றிவிட்டோம். இதனால் எல்லா வங்கியிலும் தடையின்றி பயிர்க் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

அர.சக்கரபாணி (திமுக கொறடா): ஏப்.1 முதல் வட்டியில் லாமல் சிட்டா, அடங்கல் மூலம் நகைக் கடன் வழங்கப்படுமா?

அமைச்சர் செல்லூர் ராஜூ: ஒரு நபர் ஜாமீன், சிட்டா, அடங்கல் கொடுத்தும் வாங்கலாம். தற் போது 3 லட்சத்து 70 ஆயிரம் கேசிசி கார்டு அளித்துள்ளோம். தகுதியான எல்லோருக்கும் விவசாய கடன், வட்டியில்லாக் கடன் வழங்கப்படும். அச்சம் தேவை யில்லை.

இவ்வாறு விவாதம் நடந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

53 mins ago

கருத்துப் பேழை

49 mins ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

33 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

11 mins ago

மேலும்