வண்டலூர் பூங்காவுக்கு நீல நிற மக்கா கிளி: லக்னோ உயிரியல் பூங்கா வழங்கியது

By செய்திப்பிரிவு

லக்னோ பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த ஒரு ஜோடி நீல நிற மக்கா கிளி வண்டலூர் பூங்காவுக்கு வழங்கப்பட்டுள்ளன.

நாட்டில் உள்ள உயிரியல் பூங்காக்களில் தேர்வு செய்யப்பட்ட பூங்காக்களில் மட்டும் அடைப்பிட இனப்பெருக்க முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இம்முறையின் மூலம் அழிவின் விளிம்பில் உள்ள விலங்கினங்கள் உயிரியல் பூங்காக்களில் பராமரிக்கப்பட்டு, அங்கு அவற்றுக்கு ஏற்ற இயற்கையான இனப்பெருக்க சூழலை ஏற்படுத்தி இனப்பெருக்கம் செய்ய வழிவகை செய்யப்படுகிறது. அடைப்பிட இனப்பெருக்க முறையில் குறிப்பிட்ட உயிரியல் பூங்காவில் அதிகரிக்கும் விலங்கினங்கள், விலங்குகள் பரிமாற்ற நடைமுறையின் கீழ் வேறு உயிரியல் பூங்காக்களுக்கு வழங்கப்படுவது வழக்கம்.

அதன் அடிப்படையில் லக்னோ பூங்கா சார்பில் ஒரு ஜோடி தங்க நிறக் கோழி, ஒரு ஜோடி நீல நிற மக்கா கிளி ஆகியவை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவை நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) வண்டலூர் பூங்காவை வந்தடைந்தன. அங்கு கால்நடை மருத்துவர்களின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் பார்வையாளர்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த விலங்கினங்களுக்கு மாற்றாக வண்டலூர் பூங்காவில் இருந்து ஒரு ஆண் நெருப்புக் கோழி லக்னோ உயிரியல் பூங்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்