கும்பகோணம் சக்கரபாணி கோயில் உற்சவருக்கு அரை கிலோ தங்கத்தால் திருவடி

By செய்திப்பிரிவு

‘பாஸ்கர ஷேத்திரம்’ எனப் போற்றப்படும் கும்பகோணம் சக்கரபாணி கோயில் உற்சவருக்கு அரை கிலோ எடையிலான தங்கத்தால் செய்யப்பட்ட திருவடி நேற்று காணிக்கையாக வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகவத் கைங்கர்ய அறக்கட்டளை சார்பில் ரூ.20 லட்சம் மதிப்பில் அரை கிலோ எடையிலான தங்கத்தால் திருவடி செய்யப்பட்டது. இது நேற்று கோயிலில் ஒப்படைக்கப்பட்டது. இதையொட்டி முன்னதாக கோயிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. பின்னர், தங்கத் திருவடி உற்சவருக்கு அணிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அறக்கட்டளை நிர்வாகிகள் எஸ்.ஆர்.ஸ்ரீதர், ஆர்.ஸ்ரீதரன் மற்றும் பட்டாச்சாரியார்கள் கலந்துகொண்டனர்.

உற்சவருக்கு முதன் முதலாக தங்கத்தால் திருவடி செய்து வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து உற்சவருக்கான கவசங்கள் உள்ளிட்டவை தங்கத்தால் செய்யப்பட்டு காணிக்கையாக வழங்கப்பட உள்ளன என அறக்கட்டளையினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்