தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: நிர்வாகங்களுக்கு அமைச்சர் நிலோபர் கபீல் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்வது நிர்வாகங்களின் கடமை என்று தொழிலாளர் பாதுகாப்பு தின செய்தியில் அமைச்சர் நிலோபர் கபீல் அறிவுறுத்தியுள்ளார்.

ஆண்டுதோறும் மார்ச் 4-ம் தேதி தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து தொழிலாளர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு பல்வேறு தொழிற்சாலைகளில் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதை முன்னிட்டு தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் வெளியிட்ட செய்தி:

இந்த ஆண்டு மார்ச் 4-ம் தேதி 49-வது தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. தொழிலாளர்கள் பாதுகாப்பு உணர்வுடன் விபத்துக்களின்றி பணிபுரிந்து வாழ்வில் மேலோங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்நாள் கொண்டாடப்படுகிறது.

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு தொழில்துறையின் வளர்ச்சி மூலகாரணமாகும். தொழில்துறையில் தொழில்நுட்ப வளர்ச்சி யின் காரணமாக புது வகையான இயந்திரங்கள் அதிகரித்து வருவ தால், தொழிலாளர்கள் விபத்துகள் இன்றி மேலும் பாதுகாப்புடன் பணிபுரி வது மிகவும் இன்றியமையாத ஒன் றாகும். இதனால் உற்பத்தித் திறன் பெருகி வேலைவாய்ப்பும் அதி கரித்து வருகிறது. இந்நிலையில் தொழிலாளர்களின் பாதுகாப்பு விழிப்புணர்வை வளர்ப்பது நிர்வாகத்தின் தலையாய கடமையாகும்.

தொழிலாளர்கள் மேம்பாட்டுக்காக தமிழக அரசு பல சீரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொழிலாளர்கள் நலன் சார்ந்து அவர்கள் வாழ்க்கை உயர, தொழி லாளர்களுக்கு பல்வேறு நலத்திட் டங்கள் அரசால் அறிவிக்கப்பட்டு, முதல்வரால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்க அலுவலர்கள் தொழிலாளர்களின் பாது காப்பு மேம்பாட்டில் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர்.

மேலும், பாதுகாப்பு உணர்வை நிர்வாகங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் உருவாக்கும் வண்ணம், பெருமளவு விபத்துகளை குறைத்திட்ட மற்றும் விபத்துகள் இல்லாமல் செயல்பட்ட தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கு மாநில அளவில் பாதுகாப்பு விருது, பாதுகாப்பு மேம்பாடு, உற்பத்தித் திறன் மற்றும் தர மேம்பாடு குறித்த ஆலோசனைகள் கூறும் தொழிலாளர்களுக்கு ‘உயர்ந்த உழைப்பாளர் விருதும்’ தமிழக அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

தமிழக அரசின் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத் துடன் இணைந்து தேசிய பாதுகாப்பு குழுமத்தின் தமிழ்நாடு பிரிவு தொழி லாளர்கள் பாதுகாப்பு மேம்பாட்டுக் காக சிறப்பான பணிகளை ஆற்றி வருகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

47 mins ago

கருத்துப் பேழை

43 mins ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

27 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 mins ago

மேலும்