பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறைகளில் புதிய திட்டங்கள்: உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆய்வு

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவை மானிய கோரிக்கை விவாதம் தொடங்கப்பட உள்ளதைதொடர்ந்து, பொதுப்பணித்துறைமற்றும் நெடுஞ்சாலைத்துறைகளின் புதிய திட்டங்கள் தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி 2 நாட்களாக ஆலோசனை நடத்தினார்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்.14-ம் தேதி 2020-21-ம்நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தொடர்ந்து நிதிநிலை அறிக்கை மீதான விவாதம்பிப்.20-ம் தேதி வரை நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து துறைகள் தோறும் நிதி ஒதுக்குவதற்கான மானிய கோரிக்கை விவாதத்துக் காக பேரவை மார்ச் 9-ம் தேதி கூடும் என்றும், இதற்கான அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் வரும் மார்ச் 2-ம் தேதி நடைபெறும் என்றும் சட்டப்பேரவை செயலகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், துறைகள் தோறும் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டங்களை நடத்தி, சட்டப்பேரவையில் புதிய திட்டங்கள் அறிவிப்பு, பழைய திட்டங்களை தொடருவது, நிதி ஒதுக்குவது ஆகியவை குறித்து அமைச்சர்கள் ஆலோசித்து வருகின்றனர். இதன்ஒரு பகுதியாக முதல்வர் பழனிசாமியும் கடந்த இரு தினங்களாக ஆய்வு செய்து வருகிறார்.

அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

நேற்று முன்தினம், நெடுஞ்சாலைத்துறை தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைஇறுதியில் துறை சார்பில் அறிவிக்கப்பட வேண்டிய திட்டங்கள், ஏற்கெனவே கடந்தாண்டில் அறிவிக்கப்பட்டு தற்போதுவரை செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களின் நிலை குறித்தும் அதிகாரிகளுடன் விவாதித்து அவற்றை விரைவில் முடிக்க அறிவுறுத்தினார்.

இதையடுத்து, நேற்று தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில், பொதுப்பணித்துறை திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது தலைமைச் செயலர் கே.சண்முகம், பொதுப்பணித்துறை செயலர் கே.மணிவாசன், தமிழ்நாடு நதிநீர் பாதுகாப்புக்கழக தலைவர் கே.சத்யகோபால், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நீர்பாசன திட்டங்கள்

இக்கூட்டத்தில் குடிமராமத்துதிட்டம், மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் பங்கீடு, அத்திக்கடவு - அவிநாசி திட்டம், பாண்டியாறு - புன்னம்புழா திட்டம், காவிரி நதிநீர் இணைப்பு திட்டங்கள் என பல்வேறு திட்டங்கள் குறித்தும் பொதுப்பணித் துறையினருடன் ஆலோசனை நடத்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

11 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்