தமிழகத்தில் மழை தொடரும்: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்துக்கு ஆங்காங்கே மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஜூன் 1-ம் தேதி முதல் இதுவரை 123.3 மி.மீ. மழை பெய்துள்ளது.

கரூர், மதுரை, நாமக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் சராசரியை விட குறைவான மழையே பெய்து வந்துள்ளது. கோவை, கடலூர், தேனி உள்ளிட்ட சில மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் தென்மேற்கு பருவமழை சராசரி மழை அளவில் சுமார் 90 சதவீதம் பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டிலும் சராசரியாக மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒரு வாரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக ஆங்காங்கே மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் நேற்று கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் 2 செ.மீ., நீலகிரி மாவட்டம் தேவலாவில் ஒரு செ.மீ. மழை பெய்துள்ளது.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

உலகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்