அதிமுகவுக்கு தாவிய திமுக பெண் கவுன்சிலர்

By செய்திப்பிரிவு

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுவின் 20 உறுப்பினர்களில் அதிமுக கூட்டணிக்கு 10 இடங்கள் இருந்தும் இட ஒதுக்கீட்டின்படி பட்டியலின பெண் உறுப்பினர் இல்லை. இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பட்டியலின பெண் உறுப்பினரான சந்திரமதி தாமதமாக வந்தார்.

சந்திரமதி பதவியேற்றபிறகு, அவரை தங்களுடன் அழைத்துச் செல்ல திமுகவினரும், அதிமுகவினரும் முயன்றதால் இருகட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு, கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து காவல்கண்காணிப்பாளர் இரா.பாண்டியராஜன் இரு கட்சியினரையும் சமாதானப்படுத்த முயன்றதுடன் சந்திரமதியை ஊராட்சி ஒன்றிய லுவலகத்துக்குள் அனுப்பி வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் போலீஸாரை கண்டித்து கோஷமிட்டனர்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குள் சந்திரமதியிடம் அதிமுக நிர்வாகிகள் பேச்சு நடத்தியதால் ஆத்திரமடைந்த திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, சந்திரமதியிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர் அதிமுகவினருடன் செல்வதாகக் கூறியதால், போலீஸார் அவரை அங்கிருந்து அதிமுகவினருடன் வாகனத்தில் அனுப்பி வைத்தனர்.


கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திமுக ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் சந்திரமதியிடம் அதிமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியதால் ஆவேசமடைந்த திமுகவினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

க்ரைம்

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்