அரசு ஊழியர்கள் பரிசுப் பொருட்களை வாங்கக் கூடாது: பொதுநல வழக்கில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

அரசு ஊழியர்கள் பரிசுப் பொருட்களை வாங்கக் கூடாது என்ற தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளை அமல்படுத்தும்படி, அனைத்து அரசுத் துறைகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் பரிசுப் பொருட்களை வாங்கக் கூடாது என்ற தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளை அமல்படுத்தும்படி வேலூர் மாவட்டம், கீழ் அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பத் என்பவர் பொதுநல மனு ஒன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்த மனு இன்று நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அவரது மனுவில், “ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், புத்தாண்டை ஒட்டி, சார்புப் பணியாளர்கள், தங்கள் உயரதிகாரிகளை சந்தித்து பரிசுப் பொருட்கள் வழங்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. சுதந்திரத்துக்குப் பிறகும் தற்போது வரை இந்த நடைமுறை தொடர்கிறது.

உயர் அதிகாரிகளிடம் இருந்து பிரதிபலனை எதிர்பார்த்தே இதுபோல பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. பரிசுப் பொருட்கள் வாங்குவோருக்கும், வழங்குபவர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுத்து, இந்த சட்டவிரோத நடைமுறையைத் தடுக்கக் கோரி அரசுக்கு மனு அனுப்பினேன். அதற்கு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அளித்த பதிலில், எந்தத் துறை என்பதை குறிப்பிட்டுத் தெரிவிக்கும்படி கூறியிருந்தது.

பரிசுப் பொருட்கள், வரதட்சணை பெறக்கூடாது என காவல் துறையினருக்கு சுற்றறிக்கை அனுப்ப டிஜிபிக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது, அரசு ஊழியர்கள், தாங்களோ, தங்கள் குடும்பத்தினர் மூலமோ பரிசுப் பொருட்களைப் பெறக் கூடாது என்ற தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதியை கண்டிப்புடன் அமல்படுத்தும்படி, அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுகுறித்து இரண்டு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கும், லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் உத்தரவிட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

10 mins ago

தமிழகம்

21 mins ago

சினிமா

39 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

58 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்