பரூக் அப்துல்லா காவல் மேலும் நீட்டிப்பு: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

By செய்திப்பிரிவு

பொதுப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் முன்னாள் முதல்வரும், எம்.பி.யுமான பரூக் அப்துல்லாவுக்கு காவல் மேலும் 3 மாதங்கள் நீட்டித்து ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் உத்தரவிட்டது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

முன்னாள் முதலமைச்சரும் மத்திய அமைச்சருமான, 82 வயது நிரம்பிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு. பரூக் அப்துல்லா அவர்கள் எவ்விதக் காரணமும் இன்றி, பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டிருப்பது நம்முடைய ஜனநாயக மரபுகளையும், அரசியலமைப்புச் சட்ட விழுமியங்களையும் அவமதிக்கும் செயலாகும்.

அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்துகிறேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்