வேலூர், தூத்துக்குடி எஸ்சி பிரிவுக்கு ;  மாநகராட்சி இடஒதுக்கீடு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு 

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் மாநகராட்சி மேயர் பதவிக்கான இட ஒதுக்கீட்டை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2 மேயர்கள் எஸ்.சி பிரிவுக்கும், 7 மேயர்கள் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித்தேர்தலில் மாநகராட்சி, நகராட்சிகளுக்கு தற்போது தேர்தல் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இட ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை முடித்துவிட்டு தேர்தல் அறிவிக்க உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகளுக்கான இட ஒதுக்கீட்டை தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி வேலூர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சிகளுக்கு மேயர் பதவி ரிசர்வ் பிரிவுக்கு ஒதுக்கீடு. செய்யப்பட்டுள்ளது. இதிலும் வேலூர் மாநகராட்சி மேயர் பதவி ரிசர்வ் தொகுதியிலேயே பெண்களுக்கு என்றும், தூத்துக்குடி ரிசர்வ் தொகுதியில் ஆண், பெண் போட்டியிடும் பொது தொகுதியாக அறிவிப்பட்டுள்ளது.

பெண்களுக்கான ஒதுக்கீடாக 7 மாநகராட்சிகளை அறிவித்துள்ளது. அதன்படி 1.திருச்சி, 2.நெல்லை, 3.நாகர்கோவில், 4.திண்டுக்கல், 5.மதுரை, 6.கோவை, 7.ஈரோடு மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட 9 மாநகராட்சிகள் தவிர மீதமுள்ள 6 மாநகராட்சிகளின் (1.சென்னை, 2.ஆவடி, 3.சேலம், 4.திருப்பூர், 5.தஞ்சாவூர், 6.ஓசூர்) மேயர் பதவிகள் பொது பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் ஆண்/பெண் இருபாலரும் போட்டியிடலாம். மொத்தமுள்ள 15 மாநகராட்சிகளில் 8 மாநகராட்சிகள் கட்டாயம் பெண் மேயர்களுக்காக ஒதுக்கப்பட்டதால் மேயரைப் பொறுத்தவரை பெண்களுக்கு 55% இட ஒதுக்கீடு கிடைத்துள்ளது எனலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

22 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

3 hours ago

வலைஞர் பக்கம்

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

இந்தியா

6 hours ago

மேலும்