திட்டமிட்ட தேதியில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும்: மாநிலத் தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

By செய்திப்பிரிவு

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சித் தேர்தல் திட்டமிட்ட தேதியில் நடக்கும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு:

“ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தால் மாநில மற்றும் மாவட்ட அரசிதழில் டிச. 9-ம் தேதி நாளிட்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டன. மேற்படி தேர்தலில் வார்டு மறுவரையறை, வார்டு உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு ஆகியவற்றைப் பொறுத்தவரை 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உச்ச நீதிமன்றம் 11-ம் தேதி அன்று வழங்கிய தீர்ப்பில் நடைபெறவுள்ள தேர்தல் அனைத்தும் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆணையிட்டுள்ளது. கிராம ஊராட்சி, வட்டார ஊராட்சி மற்றும் மாவட்ட ஊராட்சிகளில் உள்ள வார்டு மறுவரையறை மற்றும் மேற்படி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு குறித்து அரசு அறிவிக்கைகள் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது.

எனவே உச்ச நீதிமன்ற ஆணையின்படி ஏற்கெனவே டிச. 9-ம் தேதியன்று அறிவிக்கையில் உள்ள தேர்தலில் எவ்வித மாற்றமுமின்றி தேர்தல் நடை முறை கடைப்பிடிக்கப்பட்டு நிறைவடையும்”.

இவ்வாறு தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

39 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

11 hours ago

வலைஞர் பக்கம்

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்