ஓய்வுக்கு பிறகு அரசியலுக்கு வரத்துடிக்கும் திரைத்துறையினர்: மதுரை பொதுக் கூட்டத்தில் சீமான் பேச்சு

By செய்திப்பிரிவு

மதுரை யா. ஒத்தக்கடையில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாவீரன் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:

சுப.வீரபாண்டியன் கருணாநிதியை விமர்சித்தவர், தற்போது உதயநிதியை தலைவன் என்கிறார். அரசு மருத்துவமனைகளில் ஏழை நோயாளிகளுக்கு போதுமான வசதிகளை செய்யாமல், வளர்ச்சி குறித்து பலர் பேசி வருவது வேதனை அளிக்கிறது.

என் மொழியை அழியாமல் காப்பாற்றத் தான் அதிகாரத்துக்கு வரக் காத்திருக்கிறோம் இதைச் சொன்னால் தீவிரவாதி என்கின்றனர். திமுகவை வீழ்த்துவதே எனது எண்ணம். நான் இருக்கும் வரை திமுகவை ஆட்சிக்கு வரவிட மாட்டேன். அதிமுக ஆட்சியில் கூட எனக்கு உதவி கிடைத்தது. ஆனால், திமுக ஆட்சியில் முழுவதுமாக உதவிகள் தடையானது என பிரபாகரன் கூறியிருக்கிறார்.

எனக்கு வாக்களித்தால் வாழ்வீர்கள். தமிழகத் தில்தான் திரைத் துறையினரை தூக்கிப் பிடிக்கின்றனர். பிற மாநிலங்களில் அப்படி இல்லை. திரைத்துறையினர் ஓய்வுக்குப் பிறகு அரசியலுக்கு வரத் துடிக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 mins ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்