கால்நடை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று தொடங்குகிறது

By செய்திப்பிரிவு

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

இளநிலை கால்நடை மருத்துவம் (பிவிஎஸ்சி), பிடெக் (உணவு தொழில்நுட்பம்), பிடெக் (பால்வள தொழில்நுட்பம்), பிடெக் (கோழியின உற்பத்தி தொழில் நுட்பம்) ஆகிய படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி 8-ம் தேதி வரை சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடைபெற உள்ளது. பிவிஎஸ்சி கலந்தாய்வு 6, 7-ம் தேதிகளிலும், பிடெக் படிப்புகளுக்கான கலந்தாய்வு 8-ம் தேதியிலும் நடைபெறுகிறது.

இக்கலந்தாய்வு மூலமாக பிவிஎஸ்சி படிப்பில் 272 இடங்களும், பிடெக் படிப்புகளில் தலா 20 இடங்களும் நிரப்பப்பட இருப்பதாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக தேர்வுக்குழு (இளநிலை பட்டப்படிப்பு) தலைவர் டாக்டர் எம்.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

2 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்