அச்சுறுத்தும் காட்டு யானையைப் பிடிக்க வலியுறுத்தி அர்த்தனாரி பாளையம் மக்கள் சாலை மறியல்; 15க்கும் மேற்பட்ட பேருந்துகள் சிறைப்பிடிப்பு

By எஸ்.கோபு

பொள்ளாச்சி

அச்சுறுத்தும் காட்டு யானையைப் பிடிக்க வலியுறுத்தி அர்த்தனாரி பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வால்பாறை சாலையில் உள்ள நாமும் சங்கம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 15க்கும் மேற்பட்ட பேருந்துகள் பொதுமக்களால் சிறைப்பிடிக்கப்பட்டன.

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்டது அர்த்தனாரி பாளையம் கிராமம். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் உள்ள விளைநிலங்களில் காட்டு யானை, காட்டுப்பன்றி மற்றும் மயில்கள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தன.

இதுகுறித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார் ஆட்சியர் அலுவலகம் மாவட்ட வன அலுவலர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்திருந்தனர். வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால் வனவிலங்குகளால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட வந்த தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்தது.

இந்நிலையில் நேற்று இரவு அர்த்தனாரி பாளையம் கிராமம் மூன்று கை பள்ளம் சவுதியில் உள்ள ராதாகிருஷ்ணன் என்பவரது தோட்டத்தில் நுழைந்த காட்டு யானை ராதாகிருஷ்ணனை தும்பிக்கையால் தூக்கி எறிந்து தந்தத்தால் குத்திக் கொன்றது. பிறகு அங்கிருந்து மலை அடிவாரத்தில் வழியாக சென்ற யானை பேச்சிப்பள்ளம் என்னும் இடத்தில் விவசாயி செல்வராஜ் என்பவர் தோட்டத்தின் அருகில் சென்றபோது செல்வராஜ் மனைவி திரும்மாத்தாள் என்பவரைத் தாக்கியது. பின்னர் அங்கிருந்து நகர்ந்த யானை அருகில் உள்ள காட்டுக்குள் சென்று மறைந்தது. இதில் படுகாயம் அடைந்த திரும்மாத்தாளை அருகிலிருந்தவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்நிலையில் காட்டு யானையைப் பிடிக்க வலியுறுத்தி அர்த்தனாரி பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வால்பாறை சாலையில் உள்ள நாமும் சங்கம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் உடுமலை, ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை சாலைகளில் போக்குவரத்து தடைபட்டது. 15க்கும் மேற்பட்ட பேருந்துகள் பொதுமக்களால் சிறைப்பிடிக்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

உலகம்

4 mins ago

இந்தியா

15 mins ago

இந்தியா

48 mins ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்