மழைக் காலத்தில் மின்தடை ஏற்பட்டால் உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும்: மின் ஊழியர்களுக்கு அமைச்சர் தங்கமணி அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை

மழைக் காலத்தில் மின்தடை ஏற்பட்டால் உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும் என, மின்வாரிய ஊழியர்களுக்கு அமைச்சர் தங்கமணி அறிவுறுத்தி உள்ளார்.

மின்துறை அமைச்சர் தங்கமணி, மின் பகிர்மான பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தை நேற்று நடத்தினார். சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்தில், மழைக் காலத்தில் மின் கட்டமைப்பு மேலாண்மை, மின் தடங்கல் மற்றும் மின் உபகரணங்கள் பராமரிப்பு பற்றி ஆய்வு மேற்கொண்டார்.

விழிப்புடன் பணியாற்ற..

மேலும் மழைக் காலத்தில் மின்சார வாரிய அனைத்து அலுவலர்களும் மற்றும் ஊழியர்களும் விழிப்புடன் பணிபுரிய வேண்டும்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

மின் தடங்கல் ஏற்படும் இடங்களில் மின்வாரிய ஊழியர்கள் விரைவாக செயல்பட்டு மின் தடங்கலை உடனுக்குடன் நீக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்துமாறு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், ‘டான்ஜெட்கோ’ நிறுவனத்தின் தலைவர் விக்ரம் கபூர், தமிழ்நாடு எரிசக்தித்துறை நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஆசியா மரியம், இணை மேலாண்மை இயக்குநர் டாக்டர் சு. வினித், மேலாண்மை இயக்குநர், அனைத்து இயக்குநர்கள், அனைத்து தலைமை பொறியாளர்கள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்