மத்திய அரசிடம் இருந்து உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பாததால் தாமதம்: அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை

மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்களை மத்திய அரசு அனுப்பாததால் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தாமதமாகிறது என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் நடந்த விழிப்புணர்வு பேரணியில் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர் பாண்டியராஜன் பங்கேற்றார். 5 கி.மீ தூரம் சைக்கிளில் பயணம் மேற்கொண்ட அமைச்சரிடம், உள்ளாட்சித் தேர்தல் தாமதம் மற்றும் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் முடிவு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதில்:

மாநில தேர்தல் ஆணையத் துக்கு வாக்குப்பதிவு இயந்திரங் களை மத்திய அரசு இன்னும் அனுப்பவில்லை. இந்த தாமதத் தால்தான் நீதிமன்றத்தில் அவகாசம் கோரப்பட்டுள்ளது. நீதிமன்றம் அவகாசம் அளித்தால் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும். இல்லையெனில் நவம்பர், டிசம்பரில் நடக்கும் என்பதை முதல்வர் தெளிவாக தெரிவித்து விட்டார்.

திமுக தலைவர் ஸ்டாலினைப் பொறுத்தவரை தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்காக தொண்டர்களிடம் அவ்வாறு தெரிவித்து வருகிறார். அவருக்கு அந்த உரிமை இருக்கிறது என்று நினைக்கிறேன். 2 தொகுதிகளிலும் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தல் மற்றும் எதிர்வரும் சட்டப்பேரவை பொதுத் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.உள்ளாட்சித் தேர்தல் மற்றும் எதிர்வரும் சட்டப்பேரவை பொதுத் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

48 mins ago

கருத்துப் பேழை

32 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

3 hours ago

மேலும்