தாம்பரம் - வண்டலூர் இடையே பெருங்களத்தூரில் ரூ.207 கோடியில் ரயில்வே மேம்பாலம்: முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

By செய்திப்பிரிவு

சென்னை

தாம்பரம் அடுத்த பெருங்களத் தூரில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.206 கோடியே 83 லட்சம் செலவில், தாம்பரம் - வண்டலூர் ரயில் நிலையங்களுக்கு இடையில் கட்டப்பட உள்ள ரயில்வே மேம் பாலத்துக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

சென்னை தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதி கள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. ஊரப்பாக்கம் அடுத்த கிளாம்பாக்கம் பகுதியில் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. தற்போது பெருங்களத்தூரில் இருந்து தென் மாவட்டங்கள், மத்திய மாவட்டங்களுக்கு பேருந் துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனால், பெருங்களத்தூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும், இப்பேருந்து நிலையத்தை ஒட்டி ரயில் நிலையமும் உள்ளதால், சென்னை நகருக்குள் செல்லும் பொதுமக்கள் அங்கிருந்தே மின்சார ரயில் மூலம் பயணிக்கின்றனர்.

இப்பகுதியில் நிலவும் போக்கு வரத்து நெரிசல் மற்றும் இங் குள்ள ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால், பீர்க்கன்காரணை, பெருங்களத்தூர் பகுதிகளில் வசிக் கும் மக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

இதனால், இப்பகுதியில் வாகனம் செல்ல மேம்பாலம், ரயில் நிலையத்தையும் சாலையை யும் கடக்கும் வகையில் நடை மேம்பாலம் ஆகியவை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, கடந்த 2015-ம் ஆண்டு பெருங்களத்தூர் பகுதியை ஜிஎஸ்டி சாலையுடன் இணைக்கும் வகையில் ரூ.76 கோடி மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலப் பணிகள் தொடங்கின. ரயில்வே துறை சார்பில் ரயில் நிலையத்தில் மேற் கொள்ளப்பட வேண்டிய பணிகள் முடிந்து விட்டன.

காணொலிக் காட்சி

ஆனால், ஜிஎஸ்டி சாலை மற்றும் பெருங்களத்தூரை இணைக்கும் வகையிலான மேம்பாலப் பணிகளை நெடுஞ்சாலைத்துறை மேற்கொள்ளாமல் இருந்தது.

இந்நிலையில் தற்போது, தமிழக நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.206 கோடியே 83 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, மேம்பாலப் பணிகள் தொடங்குவதற்கு காணொலிக் காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் மற்றும் வண்டலூர் ரயில் நிலையங்களுக்கு இடையில் பெருங்களத்தூரில் ரயில்வே கேட் எண் 32-க்கு மாற்றாக ரூ.206 கோடியே 83 லட்சத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட உள்ளது. இந்த மேம்பாலத்துக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில், ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், தலைமைச் செயலர் கே.சண்முகம், நெடுஞ்சாலைத் துறை செயலர் எஸ்.கே.பிரபாகர், தலைமைப் பொறியாளர் ச.சுமதி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்ற னர். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

56 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

வணிகம்

9 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்