புதுச்சேரியில் இந்த ஆண்டில் 1,010 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு: ஒருவர் உயிரிழப்பு என அமைச்சர் தகவல்

By செய்திப்பிரிவு

புதுச்சேரி

புதுச்சேரியில் நடப்பாண்டு மட்டும் 1,010 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் டெங்கு மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலரும் காய்ச்சல் உள்பட பல்வேறு சிகிச்சைகளுக்காக மருத்துவமனைகளை நாடி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளை விட தற்போது கூடுதலானோர் சிகிச்சைக்கு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதுச்சேரியில் டெங்கு பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவிடம் கேட்டதற்கு, "2016-ம் ஆண்டு 400 பேரும் 2017-ம் ஆண்டு 4,000 பேரும் 2018-ம் ஆண்டு 500 பேரும் 2019-ல் தற்போது வரை 1,010 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு கடந்த ஆண்டை விட அதிகம் என்றாலும் இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. 1,010 பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறை மூலம் மருத்துவமனைகளில் தகுந்த சிகிச்சை அளிக்கப்படுவதால் இறப்பு விகிதம் குறைந்துள்ளது" என்று தெரிவித்தார்.

செ.ஞானபிரகாஷ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

11 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்