துறைமுக மசோதாவுக்கு எதிர்ப்பு: தூத்துக்குடி துறைமுக ஊழியர்கள் போராட்டம்

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி

துறைமுக மசோதாவுக்கு (மேஜர் போர்ட் அத்தாரிட்டி 2019) எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் முன் துறைமுக ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

நாட்டிலுள்ள அனைத்து துறைமுகங்களையும் தனியார்மயமாக்கும் வகையில் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு மேஜர் போர்ட் அத்தாரிட்டி 2019 என்ற மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் துறைமுகங்களில் காலிப் பணயிடங்களை நிரப்ப வலியுறுத்தியும் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

துறைமுகத்தின் நிர்வாக அலுவலகம் முன்பு தூத்துக்குடி வ.உ.சி துறைமுக பொறுப்பு கழக உறுப்பினரும், சிஐடியு மாவட்டச் செயலாளருமான ரசல் தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்தில் துறைமுக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேஜர் போர்ட் அத்தாரிட்டி 2019 மசோதா நிறைவேற்றப்பட்டால் இந்தியாவினுடைய பெருந்துறைமுகங்கள் அரசினுடைய கட்டுப்பாட்டை இழந்து தனியாருடைய கட்டுப்பாட்டுக்குள் போகக்கூடிய மிகப்பெரிய அபாயம் இருக்கிறது. பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய துறைமுகங்களை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

இந்திய துறைமுகங்களுக்கு சொந்தமாக இருக்கிற பல லட்சக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு லட்சத்து 74 ஆயிரம் ஏக்கர் நிலங்களை தனியார் அபகரிப்பு கூடிய சூழல் ஏற்படும்.

துறைமுகத்தின் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி இருப்பு உள்ள பென்ஷன் பண்ட் ஆக அல்லது கிராஜுவிட்டி போன்ற பல்வேறு பெயர்களில் துறைமுகங்களில் இருக்கிற அரசினுடைய நிதி இருப்பை தனியார் நிறுவனங்களிலும் பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்ய முயற்சி நடக்கிறது. இந்த முயற்சியை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டன.

துறைமுகங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இந்தியாவில் பிற எல்லா துறைமுகங்களிலும் 40 ஆண்டுகளுக்கு மேலாக பணி செய்து வரும் கேண்டீன் ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி துறைமுகத்தில் பணி செய்துவரும் ஊழியர்களையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.

துறைமுக ஊழியர்களின் மருத்துவ செலவு உட்பட பல சலுகைகள் பறிக்கபடுவது போன்ற துறைமுகங்கள் சீர்குலைவு நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும், என குரல் எழுப்பப்பட்டன.

ஏற்றுமதி இறக்குமதி சார்ந்தே இந்திய பொருளாதாரம் இருக்கின்ற சூழலில் இந்தியா துறைமுகங்களில் அரசுத்துறையில் அடுத்தவர் மூலதனம் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் எனவே, மத்திய அரசு உடனடியாக மேஜர் போர்ட் அத்தாரிட்டி 2019 மசோத கைவிட வேண்டும் என்று தர்ணாவில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

2 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

51 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்