உறுதி மொழி ஏற்காத அறநிலையத்துறை ஆணையரை பணிநீக்க கோரி மனு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை

இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி உறுதி மொழி ஏற்காத ஆணையர் மற்றும் பிற அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில், அத்துறையின் ஆணையர், பிற அதிகாரிகள் பணியில் சேரும் முன், அருகிலுள்ள கோயிலில் உள்ள முதன்மைக் கடவுள் முன்பு, தான் இந்து மதத்தில் பிறந்தவர் என்றும், இந்து மதத்தை தொடர்ந்து பின்பற்றுபவர் என்றும் உறுதிமொழி எடுப்பதுடன், உறுதிமொழி படிவத்திலும் கையெழுத்திட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த சட்டப்பிரிவுகளின்படி தற்போதைய இந்து சமய அறநிலையத்துறை ஆணையரும், பிற அதிகாரிகளும் எந்த உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளவில்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளதாகக் கூறி இந்த அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என சென்னையை சேர்ந்த ஸ்ரீதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை இன்று (அக்.23) விசாரித்த நீதிபதிகள் சத்தியநாரயணன், சேசஷாயி அமர்வு, மனுவுக்கு நவம்பர் 28-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கும், இந்து அறநிலையத்துறை ஆணையருக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

17 mins ago

கருத்துப் பேழை

13 mins ago

சுற்றுலா

50 mins ago

சினிமா

55 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

வணிகம்

3 hours ago

மேலும்