சென்னையில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் சிஐஎஸ்எப் படை பாதுகாப்பு வழங்கலாமா? - நீதிமன்ற பாதுகாப்பு குழு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை

உயர் நீதிமன்றம் போல சென்னையில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் சிஐஎஸ்எப் பாதுகாப்பு வழங்குவது குறித்து 3 மாதத்தில் பதிலளிக்க உயர் நீதிமன்ற பாதுகாப்பு குழுவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவி க்கக் கோரி சில வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதி அமர்வில் போராட்டம் நடத்தினர். அதையடுத்து உயர் நீதிமன்றத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையின் (சிஐஎஸ்எப்) பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, கடந்த 2015 நவ.16 முதல் சிஐஎஸ்எப் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்பு உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிஐஎஸ்எப் பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி, நீதிபதி சி.சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடு தல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜ கோபாலன், ‘‘சிஐஎஸ்எப் பாதுகாப்பு இல்லாத நீதிமன்ற வளாகங்களில் கொலை முயற்சி மற்றும் போராட் டங்கள் போன்ற சம்பவங்கள் நடந்து வருவதால், உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் சிஐஎஸ்எப் பாதுகாப்பை நிரந்தரமாக்கி உத்தரவிட வேண்டும்’’ என்றார்.

அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதிடும்போது, ‘‘சென்னை உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் மாவட்ட நீதிமன்றங்கள் உள்ள பகுதிகளுக்கும் சிஐஎஸ்எப் பாதுகாப்பு வளையத்தை நீட்டித்தால் வழக்கறிஞர்களை சந்திக்க வழக்கறி ஞர்களின் சேம்பர்களுக்கு வரும் வழக் காடிகள் சிரமம் அடைவர்’’ என்றார்.

வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் வாதிடும்போது, ‘‘ஏற்கெனவே சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஒருவர் விசாரணைக்கு ஆஜரான தனது மனைவியை கத்தியால் குத்திய சம்பவம் நடந்துள்ளது. அதேபோல வழக்கறிஞரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவமும் நடந் துள்ளது.

இதேபோல சைதாப்பேட்டை, எழும்பூர், ஜார்ஜ் டவுன் உள்ளிட்ட பிற நீதிமன்றங்களிலும் சில விரும்பத்த காத சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே, உயர் நீதிமன்ற வளாகம் மட்டுமின்றி வெளியே உள்ள பிற நீதிமன்றங்களுக்கும் சிஐஎஸ்எப் பாதுகாப்பை நீட்டிக்க வேண் டும். அப்போதுதான் இதுபோன்ற சம் பவங்கள் நடக்காது. மேலும் சிஐஎஸ்எப் பாதுகாப்பை உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் நீட்டித்தால் வழக்கறிஞர்கள் ஒரே ஒருமுறை சோத னைக்கு உட்படுத்துவதன் மூலம் நடை முறை சிரமங்கள் குறையும்’’ என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், ‘‘சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள சிஐஎஸ்எப் பாதுகாப்பை மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை நீட்டித்து உத்தர விடுகிறோம். இதேபோல உரிமை யியல் நீதிமன்றங்கள், குடும்பநல நீதிமன்றங்கள் உள்ள உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் சிஐஎஸ்எப் பாதுகாப்பை நீட்டிப்பது குறித்தும், சென்னையில் உள்ள பிற நீதிமன் றங்களுக்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு வழங்குவது குறித்தும் மூத்த நீதிபதிகள் அடங்கிய உயர் நீதிமன்ற பாதுகாப்பு குழு 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என பரிந்துரைத்து விசாரணையை தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

49 mins ago

கருத்துப் பேழை

45 mins ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

29 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

7 mins ago

மேலும்