விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 9 மணி நிலவரம்; 12.84% வாக்குகள் பதிவு

By எஸ்.நீலவண்ணன்

விழுப்புரம்

விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி அத்தொகுதியில் 12.84% வாக்குகள் பதிவாகியுள்ளன.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 11,607. பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 11,546. திருநங்கைகள் 25 மற்றும் ராணுவத்தில் பணியாற்றுபவர்கள் 209 வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 23,387 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் . இத்தேர்தலில் அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வன், திமுக சார்பில் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமி, தமிழ் பேரரசு கட்சி சார்பில் கவுதமன் உட்பட 12 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தல் பணிகளில் 1333 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 29 மைக்ரோ அப்சர்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

103 கிராமங்களுக்குட்பட்ட 275 வாக்குசாவடிகளில் இன்று (அக்.21) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று துணை ராணுவ படையினர் மற்றும் போலீஸார் அணிவகுப்பு விக்கிரவாண்டி நகரின் முக்கிய வீதிகளில் நடைபெற்றது, மேலும் வாக்குச் சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மொத்தமுள்ள 275 வாக்குச்சாவடிகளில் 157 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. அதாவது 103 கிராமங்களில் 61 கிராமங்களில் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியிடும் 12 வேட்பாளர்களில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் உட்பட 6 வேட்பாளர்கள் தங்கள் வாக்கைப் பதிவு செய்தனர். இந்நிலையில், அத்தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 12.84% வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதனிடையே, விக்கிரவண்டி தொகுதி சோழம் பூண்டி, சங்கீதமங்கலம் உள்ளிட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதால் 30 நிமிடம் முதல் 40 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்