மத்திய அரசுக்கு எதிராக வதந்திகளை பரப்புகின்றன: ஊடகங்கள் மீது ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

பெரம்பலூர்

தமிழக ஊடகங்கள் திட்டமிட்டு மத்திய அரசுக்கு எதிராக வதந்திகளை பரப்புகின்றன என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தேச ஒற்றுமை பிரச்சாரம் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று மாலை பெரம்பலூர் வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காஷ்மீர் மாநிலத்துக்கான 370-வது சிறப்பு அந்தஸ்து நீக்கம் குறித்து மத்திய அரசு அறிவிப்பு செய்ததும் அனைத்துக் கட்சியினரும் ஆதரவு அளித்தனர். ஆனால், தமிழகத்தில் மட்டும் போராட்டம் நடைபெற்றது. அவ்வாறு போராட்டம் நடத்தியவர்கள் பிரிவினைவாதிகள். பகவத் கீதை குறித்து கடந்த சில நாட்களாக ஊடகங்களில் விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இதை எப்படி ஊடகங்கள் அனுமதிக்கின்றன?. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இந்த செயலுக்காக ஊடகங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தும் செயல்களில் ஊடகங்கள் ஈடுபடக்கூடாது.

தமிழ்நாட்டில் உள்ள ஊடகங்கள் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக திட்டமிட்டு வதந்திகளை பரப்பி வருகின்றன என வெளிப்படையாக நான் குற்றம் சுமத்துகிறேன். ஊடகங்கள் இந்தப் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

55 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

11 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

சுற்றுலா

4 hours ago

கல்வி

3 hours ago

மேலும்