எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் 5-வது முறையாக சாதனை; ‘கிரிஷி கர்மான் விருது’க்கு தமிழகம் தேர்வு- முதல்வர் பழனிசாமியிடம் வேளாண் துறை அமைச்சர் வாழ்த்து 

By செய்திப்பிரிவு

சென்னை

எண்ணெய் வித்துகள் உற்பத்தி யில் சாதனை படைத்ததற்காக 2017-18-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் ‘கிரிஷி கர்மான்’ விருது தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. இவ்விருதை 5-வது முறையாக தமிழகம் பெறுகிறது என்பது குறிப் பிடத்தக்கது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வேளாண் விளை பொருட் களின் உற்பத்தித்திறனை அதிகரிக் கவும், விவசாயிகளின் வருமா னத்தை பெருக்கவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது.

கடந்த 2011-12-ம் ஆண்டில், அப்போதைய முதல்வர் ஜெய லலிதாவால் அறிமுகப்படுத்தப் பட்ட 2-ம் பசுமை புரட்சி மற்றும் உணவு தானிய இயக்கத்தின் காரணமாக, தமிழகத்தில் உணவு தானிய உற்பத்தி தற்போது 2 மடங்கு சாதனையை எட்டியுள்ளது.

தமிழக அரசின் முயற்சிகள், உற்பத்தித்திறனை அதிகரிக்க வேளாண் துறையால் கடைபிடிக்கப் பட்ட புதிய சாகுபடி தொழில் நுட்பங்கள் காரணமாக வேளாண் உற்பத்தியில் உள்ள இடைவெளி குறைத்து, தமிழகம் கடந்த 2011-12, 13-14, 2014-15 மற்றும் 2015-16 ஆகிய ஆண்டுகளில் ஒரு கோடி மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான உணவுதானியங்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.

இதற்காக நான்கு முறை ‘கிருஷி கர்மான்’ விருதை தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. குறிப்பாக, 2011-12-ம் ஆண்டில் 1 கோடியே 1 லட்சத்து 52 ஆயிரம் மெட்ரிக் டன், 2013-14-ல் 6 லட்சத்து 14 ஆயிரம் மெட்ரிக் டன் பயறு வகை உற்பத்திக்காவும், 2014-15-ம் ஆண்டில் 40 லட்சத்து 79 ஆயிம் மெட்ரிக் டன் சிறுதானிய உற்பத்திக்காகவும், 2015-16-ம் ஆண்டில் மீண்டும் உணவு தானிய உற்பத்திக்காகவும் இவ்விருது தமிழகத்துக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து 2016-17-ல் தமிழகத் தில் கடும் வறட்சி ஏற்பட்ட போதும், அரசின் முயற்சிகளால் 2017-18-ம் ஆண்டிலும், 1 கோடியே 7 லட்சத்து 13 ஆயிரத்து 300 மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. குறிப்பாக எண்ணெய் வித்துகள் 10 லட்சத்து 38 ஆயிரத்து 200 மெட்ரிக் டன் உற்பத்தியும், உற் பத்தித் திறன் ஹெக்டேருக்கு 2,729 கிலோ என்ற அளவிலும் அதிகரித்துள்ளன. இது தேசிய அளவில் சராசரி உற்பத்தி திறனான ஹெக்டேருக்கு 1,284 கிலோவை விட இருமடங்குக்கும் அதிகம், அதாவது 113 சதவீதம் அதிகம்.

எண்ணெய் வித்துப் பயிர்களில் தமிழகத்தின் இச்சாதனைக்காக 2017-18-ம் ஆண்டின் ‘கிருஷி கர் மான்’ விருதுக்கு தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த விருதை யும் சேர்த்து, கடந்த 2011-12 முதல், 2017-18-ம் ஆண்டு வரை, இந்த அரசு வேளாண்துறையில் 5 முறை கிருஷி கர்மான் விருதை பெற்றுள்ளது.

இதற்கான மத்திய அரசின் கடிதத்தை, முதல்வர் பழனிசாமி யிடம், வேளாண் அமைச்சர் இரா. துரைக்கண்ணு, அத்துறையின் முதன்மைச் செயலர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் காண்பித்து வாழ்த்து பெற்றனர். அப்போது தலைமைச் செயலர் கே.சண்முகம். வேளாண் துறை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி ஆகியோர் இருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

க்ரைம்

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்