அடிப்படை, செயலாக்க மானியமாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.3,369 கோடி விடுவிக்க வேண்டும்: மத்திய அரசிடம் வலியுறுத்த உள்ளதாக அமைச்சர் வேலுமணி தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள அன்னை தெரசா மையத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் 91 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது.

அமைச்சர்கள் எஸ்.பி.வேலு மணி, டி.ஜெயக்குமார், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் இந்நிகழ்ச்சி யில் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:

மத்திய நிதி ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில், மத்திய அரசு, தமிழகத்தின் நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்பு களுக்கு 2015-16 முதல் 2019-20 வரை யிலான, தவணைத் தொகையான 12 ஆயிரத்து 312 கோடியே 74 லட்சத் தில், இதுவரை ரூ.8 ஆயிரத்து 531 கோடியை அடிப்படை மானிய மாக விடுவித்துள்ளது.

செயலாக்க மானியத்தின் கீழ், மொத்த ஒதுக்கீ டான ரூ.1691 கோடியே 26 லட்சத்தில், ரூ.494 கோடி விடுவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், நரேந்திர சிங்தோமர் ஆகியோரை சந்தித்தபோது, 2017-18 மற்றும் 2018-19 ஆண்டுக்கான செய லாக்க மானியம், 2018-19 ஆண் டின் 2-ம் தவணை மற்றும் 2019-20 ஆண்டுக்கான முதல் தவணை சேர்த்து ரூ.4 ஆயிரத்து 977 கோடியே 18 லட்சத்தை உடனடியாக வழங்க கோரிக்கை விடுத்தேன்.

இந்த கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, ரூ.1,608 கோடியே 3 லட்சத்தை விடுவித்துள்ளது. மேலும் சில மானியங்களுடன் சேர்த்து ரூ.3 ஆயிரத்து 369 கோடியே 5 லட்சத்தை விடுவிக்க வேண்டியுள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

விளையாட்டு

12 hours ago

சினிமா

13 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்