மறைமலை நகர் நகராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு பயிற்சி முகாம்

By செய்திப்பிரிவு

மறைமலை நகர்

மறைமலை நகரில், நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின்கீழ் துப்புரவு பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

ஆணையாளர் விஜயகுமாரி தலைமை வகித்து, பயிற்சியை தொடங்கி வைத்து, பணியாளர்களுக்கு கையேடுகள், டிராவல் பேக் போன்றவற்றை வழங்கினார்.

இந்த பயிற்சி முகாமில் செங்கல் பட்டு, மதுராந்தகம் மறைமலை நகர் நகராட்சிகளில் பணிபுரியும் 450 துப்புரவு பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில் குப்பையின் வகைகள், உருவாகும் இடத்தி லேயே தரம் பிரித்தல், அளவு மதிப்பீடு, மக்கும் குப்பை, மக்காத குப்பை, அபாயகரமான கழிவுகளை வகைப்படுத்துதல் குறித்து விளக்கப்பட்டது. மறு சுழற்சிக்கு பயன்படாத கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், பீங்கான், கண்ணாடி கழிவுகள், மருத்துவக் கழிவுகள் பிரிக்கும்போது பாதுகாப் பான உபகரணங்கள் பயன்படுத்து வது குறித்த செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும், குப்பையை பிரித்து கொடுக்காத வீட்டுக்கு பணியாளர் கள் சென்று விழிப்புணர்வு ஏற் படுத்துவது குறித்து விளக்கப் பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிவமுருகன் செய்திருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

வர்த்தக உலகம்

5 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

உலகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்