கட்டுமான தொழிலாளர்களுக்கு பணியிடத்தில் மருத்துவ சேவை வழங்க 50 வாகனங்கள்:  ரூ.18 கோடியில் வாங்க முடிவு

By செய்திப்பிரிவு

சென்னை

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பணியிடத்துக்கே சென்று மருத் துவ சேவைகள் வழங்க ரூ.18 கோடியே 28 லட்சத்தில் கூடு தலாக 50 மருத்துவ வாகனங்கள் வாங்குவதற்கு கட்டுமானத் தொழிலாளர் நலவாரிய கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொழிலாளர் நலத் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு கட்டுமானத் தொழி லாளர் நலவாரிய கூட்ட அரங்கில், அமைச்சர் நிலோபர் கபீல் தலைமையில், வாரியத்தின் 30-வது கூட்டம் நேற்று நடந் தது.

வாரியத்தின் ஒப்புதல்

கூட்டத்தில், மத்திய அரசின் கட்டுமானத் தொழிலாளர் களுக்கான மாதிரி நலத்திட்டம் அடிப்படையில் நலவாரியத்தில் பதிவு செய்த கட்டுமானத் தொழி லாளர்களின் குழந்தைகளுக்கு புதிதாக 1 முதல் 9-ம் வகுப்பு வரை கல்வி உதவித்தொகை வழங்கு வது, 10-ம் வகுப்பு முதல் உயர் கல்வி வரை ஏற்கெனவே வழங்கப் பட்டு வரும் உதவித்தொகையை உயர்த்துவது, இயற்கை மரண உதவித் தொகையை ரூ.20 ஆயிரத் தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த் துவது, விபத்து மரண உதவித் தொகையை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்து வது, முடக்க ஓய்வூதியம், கண் கண்ணாடி ஆகிய திட்டங்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் உதவித் தொகையை உயர்த்தி வழங்குவது ஆகியவை குறித்து அரசுக்கு பரிந்துரைக்க வாரியத் தின் ஒப்புதல் பெறப்பட்டது.

மேலும், கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு அவர்களின் பணியிடம் தேடி சுகாதார சேவைகள் வழங்கும் வகையில், சென்னை, காஞ்சி புரம், திருவள்ளூர் மாவட்டங் களில் ஏற்கெனவே 3 நகரும் மருத் துவ வாகனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் பயன்பாட் டைக் கருத்தில் கொண்டு சென் னைக்கு கூடுதலாக 15 வாகனங் களும், இதர மாவட்டங்களுக்கு 32 வாகனங்கள் என 50 மருத்துவ வாகனங்கள் ரூ.18 கோடியே 28 லட்சத்தில் வாங்க, அரசாணை வெளியிடப்பட்டதற்கு வாரியத்தின் ஒப்புதல் பெறப்பட்டது.

நலத்திட்ட உதவிகள்

கடந்த 2011 மே 16-ம் தேதி முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை 9 லட்சத்து 52 ஆயிரத்து 61 கட்டுமானத் தொழிலாளர்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டனர். மேலும் 13 லட்சத்து 2 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.537 கோடியே 25 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இக்கூட்டத்தில் தொழிலாளர் ஆணையர் ஆர்.நந்தகோபால், தமிழ்நாடு கட்டுமான தொழிலா ளர்கள் நலவாரிய செயலர் தி.கும ரன், வாரிய பிரதிநிதிகள் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

50 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்