பி.வி.சிந்துவுக்கு ஆந்திர அரசு பாராட்டு

By செய்திப்பிரிவு

என். மகேஷ்குமார்

விஜயவாடா

பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி சிந்துவுக்கு ஆந்திர அரசு சார்பில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.

சுவிட்சர்லாந்தில் சமீபத்தில் நடைபெற்ற உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் பி.வி.சிந்து தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்திருந்தார். இந்நிலையில் ஆந்திர அரசின் விளையாட்டு சம்மேளனம் சார்பில் சிந்துவுக்கு நேற்று பாராட்டு விழா
நடத்தப்பட்டது. விழாவில் அமைச்சர் அவந்தி ஸ்ரீநிவாஸ் மற்றும் விளையாட்டுத் துறைஅதிகாரிகள்பங்கேற்றனர்.

முன்னதாக பி.வி.சிந்து, ஆந்திர ஆளுநர் பிஸ்வபூஷண்ஹரிசந்தன் மற்றும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரை சந்தித்தார்.
அப்போது விசாகப் பட்டினத்தில் பாட்மிண்டன் அகாடமிக்காக5 ஏக்கர் நிலம் வழங்குவதாகசிந்துவிற்கு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வாக்குறுதி அளித்தார்.

அதன் பின்னர் சிந்து செய்தியாளர்களிடம் கூறுகையில், “அகாடமிக்கு 5 ஏக்கர் நிலம் வழங்குவதாக அறிவித்த முதல்வருக்கு நன்றியைதெரிவித்துக் கொள்கிறேன். மேலும் என் பெயரை பத்மபூஷண் விருதுக்கு பரிந்துரை செய்ததற்கும் நன்றியை தெரித்துக் கொள்கிறேன்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்