விளையாட்டு போட்டிக்காக சென்னை வந்த தெலங்கானா மாணவர்களை தாக்கிய பேருந்து நடத்துநர்கள்

By செய்திப்பிரிவு

சென்னை

விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள சென்னை வந்த தெலங்கானா மாணவர்களை பேருந்து நடத்துநர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவ - மாணவி யர் கபடி உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்க கடந்த 4 நாட்களுக்கு முன்பு சென்னை வந்தனர். பெரிய மேடு ஜவஹர்லால் நேரு விளை யாட்டு அரங்கில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கலந்து கொண்ட மாணவர்கள் மீண்டும் ஊருக்குச் செல்ல நேற்று முன்தினம் மாலையில் மாநகரப் பேருந்தில் ஏறி எழும்பூருக்கு வந்தனர்.

இருதரப்பில் வாக்குவாதம்

அப்போது பேருந்தில் நடத்து நருக்கும், மாணவர்களுக்கும் இடையே டிக்கெட் எடுக்கும் விவ காரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. பேருந்து எழும்பூர் ரயில் நிலையம் வந்த நிலையில், லட்சுமணன் என்ற மாணவர், நடத்துநர் வில்சனை பேருந்துக்குள் கீழே தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த வில்சன் மற்றும் எழும்பூர் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த மற்ற மாநகர பேருந்துகளின் ஓட்டு நர்கள், நடத்துநர்கள் இணைந்து தெலங்கானா மாணவர்களை சர மாரியாகத் தாக்கினர்.

இந்தச் சம்பவம் குறித்து அறிந்த எழும்பூர் போலீஸார் மாணவர்களையும், நடத்துநரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பேருந்தில் இருந்த பயணிகளை கீழே இறக்கி விட்டு, பேருந்தையும் காவல் நிலை யத்துக்கு ஓட்டிச் சென்றனர்.

காவல் நிலையத்தில் வைத்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரும் சமாதானமாகச் செல்ல ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, வழக்கு எதுவும் பதிவு செய்யப்படாமல் மாணவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தால் முன்பதிவு செய் திருந்த ரயிலை தவறவிட்ட மாண வர்கள், இரவில் வேறு ரயில் மூலம் தெலங்கானா புறப்பட்ட னர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்