சித்த மருத்துவத்துக்கு பெரும் பங்காற்றிய மறைந்த டி.வி.சாம்பசிவம் பிள்ளை படம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலை: பிரதமர் நரேந்திர மோடி நாளை வெளியிடுகிறார் 

By செய்திப்பிரிவு

சென்னை

சித்த மருத்துவத்துக்கு பெரும் பங்காற்றிய மறைந்த டி.வி.சாம்பசிவம் பிள்ளையின் படம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை நாளை (ஆக.30) பிரதமர் மோடி வெளியிடுகிறார்.

இந்திய மருத்துவ முறைகளாக ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஓமியோபதி (ஆயுஷ் - AYUSH) உள்ளன. ஆயுஷ் மருத்து வத்துக்கு சிறந்த முறையில் பங்காற்றிய 12 பேரின் படம் பொறித்த அஞ்சல் தலையை மத்திய அரசு முதல் முறையாக வெளியிட உள்ளது. நாளை (ஆக.30) டெல்லி யில் நடைபெறும் நிகழ்ச்சியில் அஞ்சல் தலைகளை பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார். முன்னதாக, 12 பேரையும் கவுரவிக் கும் விதமாக ஆயுஷ் காலண்டர் வெளியிடப்பட்டது.

இந்த 12 பேரில் தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே நபர் டி.வி.சாம்பசிவம் பிள்ளை. இவர் தொகுத்து எழுதிய ‘கலைக் களஞ்சியம் அகராதி’ சித்த மருத்துவத்துக்கு பெரும் பங்களிப் பைத் தந்துள்ளது.

5 தொகுதி 7 ஆயிரம் பக்கங்கள்

5 தொகுதிகளைக் கொண்ட இந்த அகராதியில் 87 ஆயிரம் வார்த்தைகளுடன் 7,099 பக்கங் களைக் கொண்டது. ‘மருத்துவ அகராதி தந்த மாமேதை’ என்று சித்த மருத்துவ அறிஞர்களால் அவர் அழைக்கப்படுகிறார். இவரது பங்களிப்பை அங்கீகரித்துள்ள ஆயுஷ் அமைச்சகம், ஆயுஷ் காலண்டரில் இவருக்காக ஒரு பக்கத்தை ஒதுக்கி கவுரவித்துள் ளது.

வாழ்க்கைக் குறிப்பு

தஞ்சாவூர் பகுதியை பூர்வீகமா கக் கொண்டவர் டி.வி.சாம்பசிவம் பிள்ளை. பெங்களூரில் 1880-ம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி பிறந்தார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கிளர்க் காக பணியாற்றிக் கொண்டிருந்த போது, இவரது 5 குழந்தைகளும் இறந்துவிட்டன. இதைத் தொடர்ந்து இவரது மனைவியும் காலரா நோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்.

பின்னர், இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். குழந்தை பிறப்பின்போது அவரும் இறக்க நேரிட்டது. இதனால், கடுமையான மனஅழுத்தத்தில் இருந்த நேரத்தில் சித்த மருத்துவத் தில் கவனத்தை செலுத்தத் தொடங் கினார்.

பல்வேறு கஷ்டங்களுக்கு இடையே வேலை பார்த்து சம்பாதித்த பணத்தை வைத்து சித்த மருத்துவத்துக்கு 5 தொகுதிக ளைக் கொண்ட அகராதிகளை எழுதினார். தனது சொத்துக்கள் அனைத்தையும் விற்று அகராதியின் முதல் 2 தொகுதிகளை வெளியிட் டார்.

மூன்றாவது தொகுதி அகராதியை தமிழக அரசு வெளியிட்டது. 1953-ம் ஆண்டு நவம்பர் 12-ம் தேதி தனது 73-வது வயதில் சாம்பசிவம் பிள்ளை மறைந்தார்.

ஜி.டி.நாயுடு குடும்பம்

அவரது மறைவுக்கு பின்னர் 4 மற்றும் 5-வது தொகுதி அகராதி களை ஜி.டி.நாயுடு குடும்பத்தினர் வெளியிட்டனர். சித்த மருத்துவம் படிப்பவர்கள் யாராக இருந்தாலும் இவரது அகராதியை படிக்காமல் இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு சித்த மருத்துவத்துக்கு பெரும் பங்களிப்பை ஆற்றியுள்ளார் டி.வி.சாம்பசிவம் பிள்ளை.

இதனை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் க.கனகவல்லி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்