ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் இன்று வேலைநிறுத்தம்: சென்னையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 3 பேருக்கு தீவிர சிகிச்சை 

By செய்திப்பிரிவு

சென்னை

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ கம் முழுவதும் அரசு டாக்டர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடு படுகின்றனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த 3 டாக்டர்கள் உடல் நிலை மோசமடைந்ததால் மருத் துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றும் டாக்டர்கள் ஊதிய உயர்வு உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாக்டர்கள் கூட்டமைப்பு சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த 23-ம் தேதி தொடங்கினர். அரசு டாக்டர்கள் பெருமாள் பிள்ளை, நளினி, நாச்சி யப்பன், அனிதா, அகிலன், ரமா ஆகிய 6 பேரும் இரவு, பகலாக மருத்துவமனை வளாகத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள னர். 3-வது நாளான நேற்று முன் தினம் நாச்சியப்பன், ரமா, நளினி ஆகியோரின் உடல் நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து அரசு பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட னர். அவர்களுக்கு டாக்டர்கள் குழு வினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தொடர்ந்து மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு நள்ளி ரவில் மருத்துவமனைக்கு வந்து உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி டாக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கோரிக்கைகள் நிறை வேறும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று டாக்டர்கள் திட்டவட்டமாக அவரி டம் தெரிவித்தனர். நேற்று 4-வது நாளாக உண்ணாவிரதம் தொடர்ந் ததால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று காலை 7.30 மணி முதல் நாளை காலை 7.30 மணி வரை 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் டாக்டர்கள் ஈடுபடுகின்றனர். இத னால், அரசு மருத்துவமனைகளில் ஏழை நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு டாக்டர் களிடம் கேட்டபோது, “தமிழக அரசு எங்களுடைய கோரிக்கை களை நிறைவேற்ற எந்த நடவடிக் கையும் எடுக்காததால், வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் நிலை உரு வாகியுள்ளது. இந்த 24 மணி நேர வேலை நிறுத்தப் போராட் டத்தில் விபத்து உள்ளிட்ட அவசர சிகிச்சைப் பிரிவுகளில் டாக்டர் கள் இருப்பார்கள். பிரசவங்கள் பார்க்கப்படும். மற்றபடி புறநோயா ளிகள், உள்நோயாளிகள் பிரிவு களில் டாக்டர்கள் பணியாற்ற மாட் டார்கள். திட்டமிட்ட அறுவை சிகிச் சைகள் உள்ளிட்ட அனைத்து சிகிச் சைகளும் நிறுத்தப்படும்” என்றனர்.

அரசியல் கட்சிகள் ஆதரவு

இதற்கிடையே, 4-வது நாளாக உண்ணாவிரதம் இருந்துவரும் அரசு டாக்டர்களை திமுக எம்.பி.க் கள் ஆர்.எஸ்.பாரதி, டிகேஎஸ்.இளங்கோவன், இந்திய கம்யூ னிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான் ஆகியோர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

49 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்