விலைவாசி உயராமல் பார்த்துக் கொள்வதே அரசாங்கத்தின் வேலையாக இருக்க வேண்டும்: துரைமுருகன்

By செய்திப்பிரிவு

மதுரை,

விலைவாசி உயராமல் பார்த்துக்கொள்வதே அரசாங்கத்தின் வேலையாக இருக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவரிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு அவர் தனது பாணியிலேயே கிண்டலாகவும் லாவகமாகவும் பதிலளித்துச் சென்றார்.

சட்டப்பேரவையில் திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று இதன் அடிப்படையில் தான் தற்போது பால் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது என்று முதல்வர் பேசியுள்ளாரே?

எனக்கு அதெல்லாம் தெரியாது.

பால் விலை உயர்வின் காரணமாக மக்களுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எந்த விலை கூடினாலும் பொதுமக்கள் பாதிக்கப்படத்தான் செய்வார்கள். விலைவாசி கூடத்தான்கூடும், அதைக் கூடாமல் பார்த்துக்கொள்வதே அரசாங்கத்தின் வேலையாக இருக்க வேண்டும்.

அரசு அதிகாரிகள் மக்களின் குறையை தீர்க்காத பட்சத்தில் மக்களால் தாக்குதல் நடத்த உத்தரவிடப்படும் என்று மத்திய அமைச்சர் நித்தின் கட்கரி பேசியுள்ளாரே?

அவர் கூறியது எனக்குத் தெரியாது. அவர் ஏதாவது இந்தியில் பேசியிருப்பார். அதனால் அதுபற்றி எதுவும் கூற இயலாது.

ஒரே நாடு ஒரே தேசம் என்ற பிரதமரின் பேச்சு?

அவர்கள் அப்படித்தான் சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.

இவ்வாறு துரைமுருகன் பதில் அளித்தார்.

மற்ற கேள்விகளுக்குப் பதிலளித்த துரைமுருகன், அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

27 mins ago

வலைஞர் பக்கம்

30 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

36 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்