படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்; சுயதொழில் தொடங்க கடனுதவி: கடலூர் மாவட்டத்தினர் விண்ணப்பிக்கலாம் 

By செய்திப்பிரிவு

கடலூர்

படித்த வேலைவாய்ப்பற்ற இளை ஞர்கள் சுய தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை தமிழக அரசின் மானியத்துடன் வங்கிகள் மூலம் கடனுதவி பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்

இதுதொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டு காலமாக வசித்து வரும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தங்களுக்கு விருப் பமான சிறு தொழில்களை தொடங்க மானியத்துடன் கூடிய ரூ.10 லட்சம் வரையிலான வங்கிக் கடனுதவி பெறும் வகையில் வேலை வாய்ப் பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வரு கின்றது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற் றிட (ஆண், பெண் இருபாலரும்) கல்வித் தகுதியாக குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். பெண்கள், சிறுபான்மையினர், ஆதிதிரா விடர், பழங்குடியினர், பிற்படுத்தப் பட்டோர், முன்னாள் இராணுவத் தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கையர் ஆகியோருக்கு அதிகபட்ச வயது வரம்பு 45-க்குள் இருக்க வேண்டும்.

இத்திட்டத்தில் பயன்பெற மொத்த குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,50,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க வங்கி மூலம் கடனுதவி பெற அதிகபட்சமாக வியாபாரத்திற்கு ரூ.1 லட்சமும், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.3 லட்சமும் மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சத்திற்கும் பரிந்துரைக்கப்படும். இதற்கான தமிழக அரசு மானி யம் திட்ட மதிப்பீட்டில் 25 விழுக் காடு ஆகும். அதிகபட்ச மானியம் ரூ.1.25 லட்சம் ஆகும். இத்திட்டத் தில் கால்நடை வளர்ப்பு மற்றும் நேரடி விவசாயம் செய்ய இய லாது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற் றிட இதற்கான இணையதள முகவரி http://www.msmeonline.tn.gov.in/uyegp ல் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப நகலை பதிவிறக்கம் செய்து இரண்டு நகல் களில் தேவைப்படும் அனைத்து ஆவணங்களுடன் 'பொது மேலா ளர், மாவட்ட தொழில் மையம், கடலூர் - 607001' என்ற முகவ ரிக்கு அனுப்பிட வேண்டும். விண் ணப்பிக்க மாவட்ட தொழில் மைய அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டிய அவசியமில்லை.

கடலூர் மாவட்டத்தில் அமைந் துள்ள வங்கிகள் மூலம் கடனுதவி பெற உள்ள பயனாளிகளுக்கு மேற்குறிப்பிட்ட தகுதிகள் இருப் பின் சம்பந்தப்பட்ட பயனாளிகள் இணையதளம் மூலம் விண்ணப் பித்து தமிழக அரசின் மானிய உதவி பெற்று பயன் பெறலாம். வங்கி மேலாளர்கள் தங்கள் வங்கிகள் மூலம் வழங்கும் முத்ரா கடன் திட்டத்திற்கு மானிய உதவி தமிழக அரசின் மூலம் பெறலாம் என்பது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும். மேலும் விவரங்களுக்கு 04142 - 290116 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்