தமிழக பிரச்சினைகளுக்காக மக்களவையில் திமுக கூட்டணி எம்பிக்கள் தினமும் குரல் கொடுக்கின்றனர்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தகவல்

By செய்திப்பிரிவு

தமிழக பிரச்சினைகளுக்காக மக்களவையில் திமுக கூட்டணி எம்பிக்கள் தினமும் குரல் கொடுக்கின்றனர் என்று வேலூர் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். வேலூர் அடுத்த ஊசூர், அணைக்கட்டில் ஸ்டாலின் நேற்று மாலை நடந்த பிரச்சாரத்தில் பேசும் போது, ‘‘மக்களவைத் தேர்தல் தோல்வியை அதிமுகவால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. திமுக கூட்டணியின் 38 எம்பிக்கள் நாடாளுமன்றத்துக்கு சென்று ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டின் பிரச்சினைகளை தொடர்ந்து முழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

‘நீட்’ தேர்வால் ஏழை, எளிய நடுத்தர குடும்பத்தில் பிறந்த பிள்ளைகள் மருத்துவராக வேண்டும் என்ற கனவு தகர்ந்துவிட்டது. எனவே, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர ஒப்புக்கொண்டு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

மாணவர்களின் பிரச்சினை என கருதி திமுகவும் முழு மனதுடன் ஆதரித்து தீர்மானத்தை நிறைவேற்றி குடியரசுத் தலை வருக்கு அனுப்பி வைத்தோம். பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த தீர்மானத்துக்கு அழுத்தம் கொடுத்து விலக்கு வாங்குவதில் இந்த ஆட்சி ஈடுபட்டதா? என்றால் கிடையாது.

காரணம், பாஜகவுக்கு வால் பிடிக்கும் கட்சியாக இருக்கிறது. இன்று நீட் தேர்வை எதிர்த்து மக்களவையில் திமுக கூட்டணி கட்சி எம்பிக்கள் குரல் கொடுக்கின்றனர். அதுமட்டு மில்லாமல் காவிரி பிரச்சினை, மேகேதாட்டு பிரச்சினை குறித்து குரல் கொடுக்கிறோம். தென்னக ரயில்வேயில் தமிழே பேசக்கூடாது என்றனர். எதிர்த்து குரல் கொடுத் ததும் உத்தரவு திரும்பப் பெறப் பட்டது.

தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையை சின்னாபின்னமாக்க மும்மொழி கொள்கையை புகுத்த முயன்றனர். இப்போது புதிய கல்விக் கொள்கையை புகுத்த முயற்சி எடுத்துள்ளனர். திமுக சார்பில் ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்து, அதில் என்னென்ன ஆபத்துகள் இருக்கிறது என அறிக்கையாக தயார் செய்து கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் வழங்கியுள்ளனர். 38 எம்பிக்களை தமிழ்நாடு மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பியதால்தான் இன்றைக்கு எதிர்ப்பு குரல் கொடுக்கிறோம்’’ என்றார்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

12 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

சுற்றுலா

5 hours ago

கல்வி

5 hours ago

மேலும்