இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைக்கு தீர்வு: வெங்கய்ய நாயுடு பேட்டி

By செய்திப்பிரிவு

இலங்கையின் ஒற்றுமை மற்றும் இறையாண்மையை பாதிக்காத வகையில், இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண பாஜக முயலும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.

சென்னையில் பாஜக மூத்த தலைவர் வெங்கய்யா நாயுடு ஞாயிற்றுக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:

பாஜக சக்தி மிகுந்த அணியாகியுள்ளது. வரும் தேர்தலில் பாஜக, 300க்கும் மேற்பட்ட இடங்களில் தனித்தே வெற்றி பெறும். இந்த முறை கேரளாவிலும் பாஜக தனது வெற்றிக் கணக்கை துவங்க உள்ளது. கர்நாடாகாவிலும் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம். பாஜகவில் கட்சிக்காக உழைத்தவர்களுக்கே 90 சதவீதம் சீட் வழங்கப்பட்டுள்ளது.

கட்சிக்கு தற்போது இள ரத்தம், புதியவர்கள் தேவைப்படுகின்றனர். அதற்காக, மூத்த தலைவர்களான ஜஸ்வந்த் சிங், அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி போன்றோரை ஓரம்கட்டவில்லை. மோடி பிரதமராக விரும்பாதவர்கள் மூத்த தலைவர்களை ஓரம் கட்டுவதாக பொய்யான தகவல்களை பரப்புகின்றனர்.

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க கோரிக்கை, இலங்கைப் பிரச்சினை போன்ற வற்றில், தேர்தலுக்குப் பின் அனைத்து கூட்டணிக் கட்சிகளை யும் கலந்து பேசி குறைந்தபட்ச பொது செயல்திட்டம் வகுக்கப் பட்டு, அதன்படி கொள்கைகள் வகுக்கப்படும். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இலங்கை யின் ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அங்குள்ள தமிழர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கும் வகையில் செயல்படுவோம். கூடங்குளம் அணு மின் நிலையம் நிச்சயம் நாட்டுக்குத் தேவை. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

இந்தியா

13 mins ago

இந்தியா

23 mins ago

இந்தியா

40 mins ago

தமிழகம்

56 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

மேலும்