பிரதமர் மோடி ஆகஸ்ட் 7-ல் வருகை: சென்னை பல்கலை.யில் அதிகாரிகள் ஆய்வு

By செய்திப்பிரிவு

பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் பங்கேற்கும் நிகழ்ச்சி தொடர்பாக சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர்.

மத்திய ஜவுளித் துறை சார்பில் கைத்தறி நெசவாளர்களுக்கு விருது வழங்கும் விழா வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு விருதுகளை வழங்குகிறார். வழக்கமாக டெல்லியில் நடைபெறும் இந்த விழா முதல் முறையாக சென்னையில் நடக்கிறது.

விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து மத்திய ஜவுளித் துறை செயலாளர் சஞ்சய் குமார் பாண்டா, மத்திய பட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலாளர் எச். நாகேஷ் பிரபு உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அதிகாரிகள் நேற்று காலை 10.30 மணிக்கு சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் ஆய்வு செய்தனர்.

அரங்கில் உள்ள வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், பிரதமர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களின் ஓய்வறைகள், சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வசதிகள் குறித்தும் பல்கலைக்கழக அலுவலர்களிடம் மத்திய அரசு அதிகாரிகள் கேட்டறிந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்