ஆம்பூர் கலவரம் தொடர்பான ஷமீல்அஹ்மது வழக்கில் சிபிசிஐடி விசாரணை தொடக்கம்

By செய்திப்பிரிவு

ஆம்பூர் ஷமீல் அஹ்மது வழக்கு சிபிசிஐடி போலீஸாரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் முதல்கட்ட விசாரணையை நேற்று தொடங்கினர்.

பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்த பழனி மனைவி பவித்ரா காணாமல் போன வழக்கில் ஆம்பூரைச் சேர்ந்த ஷமீல் அஹ்மதுவை பள்ளிகொண்டா போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். போலீஸார் தாக்கியதாகக் கூறி ஷமீல் அஹ்மது, சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு அங்கு ஜூன் 26-ம் தேதி உயிரிழந்தார். போலீஸார் தாக்கிய தால் ஷமீல் அஹ்மது உயிரிழந்த தாகக் கூறி ஆம்பூரில் கடந்த 27-ம் தேதி கலவரம் ஏற்பட்டது.

இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், ஷமீல் அஹ்மது வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. எஸ்பி நாகஜோதி தலைமையில் டிஎஸ்பி அனந்தகுமார், ஆய்வாளர்கள் விஜய், அன்புக்கரசி, கருணாநிதி ஆகியோர் விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர்.

சிபிசிஐடி நாகஜோதி நேற்று வேலூர் வந்தார். அவரிடம் ஷமீல் அஹ்மது வழக்கு ஆவணங்களை போலீஸார் ஒப்படைத்தனர். அதனை பெற்றுக்கொண்ட சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்து முதல்கட்ட விசாரணையை நேற்று தொடங்கினர்.

ஷமீல் அஹ்மது விசாரணைக் காக அழைத்துச் செல்லப்பட்ட பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் எஸ்பி நாகஜோதி நேற்று விசாரணை நடத்தினார். இதுகுறித்து சிபிசிஐடி போலீஸ் தரப்பில் கேட்டபோது, ஷமீல் அஹ்மது வழக்கு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. பள்ளி கொண்டா காவல் நிலையம், ஷமீல்அஹ்மது அடைத்து வைக்கப்பட்ட இடம், காணாமல் போன பவித்ராவின் இப்போதைய நிலைமை, அவரது குடும்ப பின்னணி, செல்போன் விவரங்கள் குறித்து விசாரணை தொடங்கியுள்ளது. வழக்கில் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. படிப்படியாக உண்மை நிலவரம் தெரியவரும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

உலகம்

11 hours ago

ஆன்மிகம்

11 hours ago

மேலும்