வாழப்பாடி காதல் திருமண விவகாரம்: குடிசை மீது குண்டு வீச்சு - 9 பேர் கைது

By செய்திப்பிரிவு

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த சோமம்பட்டியைச் சேர்ந் தவர் சரவணன். இவர் சென்னை யில் தனியார் வங்கியில் பணி புரிந்து வருகிறார். விலாரிபாளை யத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை பிரியா. இவர்கள் இரு வரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இவர்களின் காதலுக்கு பிரியாவின் வீட்டில் எதிர்ப்பு இருந்த நிலையில், நேற்று முன்தினம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் சேலம் எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீஸார் இருவரின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் சோமம்பட்டி கிராமத்துக்குள் 50 பேர் கொண்ட கும்பல் புகுந்து, தெரு விளக்குகளை அடித்து உடைத்தும், வீடுகள் மீதும் தாக்கு தல் நடந்தினர். மேலும், குடிசைகள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தீ வைத்தனர். இதில், சில குடிசைகள் சேதமானது.

அரை மணி நேரம் நடந்த தாக்குதலில் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் சின்னையன் உட்பட பலருக்கு காயம் ஏற்பட்டது. ஆட்டோ ஒன்று சேதம் அடைந்தது.

தகவல் அறிந்த சேலம் எஸ்.பி சுப்புலட்சுமி மற்றும் போலீஸார் விரைந்து சென்று சேதமடைந்த குடிசைகள் மற்றும் வீடுகளை பார்வையிட்டு, விசாரணை நடத்தி, குமார்(35), பன்னீர்செல்வம்(25), சுதாகர்(30), கண்ணன்(19), நடராஜ்(27), அங்கமுத்து(33), செம்மலை(46), சந்திரன்(42), கோவிந்தன்(20) ஆகிய 9 பேரை கைது செய்தனர்.

இதுகுறித்து எஸ்.பி சுப்புலட்சுமி கூறும்போது, “சோமம்பட்டியில் முழு அளவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிராமத்தில் தாக்குதல் நடத்திய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.

ஓமலூரைச் சேர்ந்த பொறியி யல் மாணவர் கோகுல்ராஜ் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தலை துண்டிக்கப்பட்டு பிணமாக மீட்கப்பட்டார். காதல் விவகாரத்தில் அவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக கூறி அவரது தாய் மற்றும் உறவினர்கள் பல்வேறு அமைப்பினர் போராட் டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், சோமம்பட்டி கிராமத்தில் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

12 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

சுற்றுலா

5 hours ago

கல்வி

4 hours ago

மேலும்