ஒட்டுக்கேட்பு மென்பொருள் விவகாரம்: ‘விக்கிலீக்ஸ்’ தகவலுக்கு டி.கே.எஸ். இளங்கோவன் பதில்

By செய்திப்பிரிவு

ஒட்டுக் கேட்பு தொழில்நுட்பத் துக்கான மென்பொருளை வாங்கு வதற்காக, இந்தியாவில் உள்ள பாது காப்பு, உளவு அமைப்புகள் மற்றும் மாநில போலீஸ் நுண்ணறிவுப் பிரிவுகள் இத்தாலி நிறுவனம் ஒன்றுடன் பேச்சு நடத்தியதாக விக்கிலீக்ஸ் மூலம் வெளியான தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இத்தாலி நிறுவனத்துடன் தமிழக நுண்ணறிவுப் பிரிவு போலீசார் 2011-ம் ஆண்டில் பேச்சு நடத்தியதாகவும் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஆந் திரம், மகாராஷ்டிரம், கர்நாடகம், மேற்குவங்கம், குஜராத், டெல்லி போலீஸாரும் மென்பொருள் வாங்கு வது தொடர்பாக பேசியதாகவும் விக்கிலீக்ஸ் தகவல்கள் தெரிவிக் கின்றன.

2011-ம் ஆண்டில் தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்ததால், விக்கிலீக்ஸ் குற்றச்சாட்டு குறித்து திமுகவின் செய்தித் தொடர் புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

விக்கிலீக்ஸ் இணையதளம் வெறும் பரபரப்புக்காகவும், வெற்று விளம்பரத்துக்காகவும் பல தகவல் களை வெளியிட்டு வருகிறது. இதுவரை அந்த இணையதளம் வெளியிட்ட எந்த தகவலும், யாராலும் நிரூபிக்கப்பட்டதில்லை.

சுவிஸ் வங்கியில் கருப்புப் பணம் வைத்துள்ள இந்தியர்களின் பட்டியல் ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன்பு விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்தது. எந்த ஆதாரங்களும் இல்லாததால் அந்தப் பட்டியலைக் கொண்டு சிறு விசாரணைகூட நடத்த முடிய வில்லை. அதுபோல விக்கிலீக்ஸின் பல செய்திகள் சில நாள் பரபரப்புடன் முடிந்துவிடும்.

ஒட்டுக் கேட்பது, வேவு பார்ப்பது என்பது உளவுத் துறையின் வழக்க மான பணிகளில் ஒன்றாகும். மத்திய, மாநில அரசுகளின் உளவுப் பிரிவுகள், உரிய அனுமதியைப் பெற்று ஒட்டுக்கேட்பு மென்பொருளை வாங்கியிருந்தால் அதை தவறாகக் கருத முடியாது. குறிப்பிட்ட நபர்களை, கட்சியை வேவு பார்த்தால் அது குற்றம். ஜனநாயகத்தையும், கருத்து சுதந்திரத்தையும் மதிக்கும் திமுக, ஒருபோதும் அதுபோன்ற செயல்களில் ஈடுபடாது.

இவ்வாறு டி.கே.எஸ்.இளங் கோவன் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

உலகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

வேலை வாய்ப்பு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

கல்வி

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்