ஆம்பூர், வாணியம்பாடியில் ஜூலை 24 வரை 144 தடை உத்தரவு: கைதான 115 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி

By செய்திப்பிரிவு

ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் 144 தடை உத்தரவு ஜூலை 24-ம் தேதி மாலை 6 மணி வரை நீட்டித்து கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

போலீஸ் விசாரணையின் போது ஆம்பூர் இளைஞர் ஷமீல் அஹ்மது உயிரிழந்ததையடுத்து, ஜூன் 27-ம் தேதி ஆம்பூரில் கலவரம் வெடித்தது. ஆம்பூர் டவுன் போலீஸார் நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

இந்நிலையில், ஆம்பூரில் நிலவி வந்த பதற்றமான சூழ்நிலையை குறைக்கவும், மீண்டும் வன்முறை சம்பவம் நடக்காமல் இருக்க ஜூலை 6-ம் தேதி முதல் 15-ம் தேதி மாலை 6 மணி வரை ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவு மூலம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டம், பேரணி, ஊர்வலம், கட்சி தலைவர்கள் பொதுமக்களை சந்தித்து பேசுதல் போன்ற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், 144 தடை உத்தரவு கெடு நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. மீண்டும் ஆம்பூரில் வன்முறை சம்பவம் நடக்கும் சூழ்நிலை உருவாகும் என போலீஸ் தரப்பில் கருதப்பட்டதால், 144 தடை உத்தரவை நீட்டிக்க வேண்டும் என திருப்பத்தூர் கோட்டாட்சியர் ரங்கராஜனுக்கு மாவட்ட காவல்துறை பரிந்துரை செய்தது. இதையடுத்து, ஜூலை 15-ம் தேதி மாலை 6 மணி முதல் 24-ம் தேதி மாலை 6 மணி வரை, ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் 144 தடையை நீட்டித்து திருப்பத்தூர் கோட்டாட்சியர் ரங்கராஜன் நேற்று உத்தரவிட்டார்.

ஜாமீன் மனு தள்ளுபடி

ஆம்பூர் கலவரத்தால் பலர் காயமடைந்தனர். பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது. இது தொடர்பாக, 132 பேரை ஆம்பூர் டவுன் போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வேலூர், சேலம், கடலூர் ஆகிய சிறைகளில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், தங்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி, கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 115 பேர் வேலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணையின் தற்போது ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் தற்போது ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி, 115 பேரின் மனுக்களையும் நீதிபதி தீனதயாளன் தள்ளுபடி செய்தார். மீதமுள்ள 17 பேரின் ஜாமீன் மனு மீது விசாரணை நிலுவையில் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

சினிமா

8 mins ago

இந்தியா

16 mins ago

க்ரைம்

13 mins ago

இந்தியா

19 mins ago

தமிழகம்

41 mins ago

இந்தியா

48 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்