5000 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் கண்டுபிடிப்பு

By செய்திப்பிரிவு

விழுப்புரத்தை அடுத்த சிறுவாலை என்ற கிராமத்தில் 5000 ஆண்டு களுக்கு முந்தைய தொல் பழங்கால ஓவியங்கள் கண்டுபிடிக் கப்பட்டுள்ளன.

உலகெங்கிலும் வரலாற்றுக்கு முந்திய கால மனிதர்களின் ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. கற்கால மனிதர்களின் கலை உணர்வையும் அவர்கள் வாழ்ந்த இடங்களையும் வாழ்க்கை முறையையும் சித்தரிக்கும் இம்மாதிரியான தொல்பழங்கால ஓவியங்கள் தமிழகம் முழுதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் விழுப்புரம் மாவட்டத்தில் கீழ்வாலை, செத்தவரை போன்ற இடங்களில் கிடைத்த ஓவியங்கள் தனிச் சிறப்புக்குரியவை. அவற்றின் காலம் கி.மு 3000 முதல் கி.மு 7000 வரை என அறிஞர்கள் கருது கின்றனர்.

அதைப்போன்ற தொல் பழங்கால ஓவிய தொகுதி ஒன்று விழுப்புரம் மாவட்டம், அன்னியூரை அடுத்த சிறுவாலையில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஊருக்குக் கிழக்கே உள்ள குவாரிகளால் உடைக்கப்பட்டு எஞ்சியுள்ள குன்றில் இதனை, அதியன் என்பவர் கண்டறிந்து தகவல் தந்தார். அதன்படி சென்னை பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஜெ.ராதாகிருஷ்ணன், செல்வன், ஆர்வலர்கள் செந்தில்பாலா, ரவி உள்ளிட்ட குழுவினர் செவ்வாய்க் கிழமை சென்று ஆய்வு நடத்தி உறுதி செய்தனர்.

இந்த ஓவியம் குறித்து ஆய்வாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: “5000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த ஓவியம் 11/2 மீட்டர் நீளமும், 50 செ.மீ. அகலமும் கொண்டது. பொதுவாக இம்மாதிரியான ஓவியங்கள் வெள்ளை மற்றும் காவி நிறத்தில் இருக்கும். இது காவி நிறத்தில் சற்றே தெளிவற்ற நிலையில் உள்ளது.

இது ஒரு இனக்குழு தலைவி, வேட்டையாடிய பின் தன் வீரர்களுடன் வேட்டையா டிய உணவுகளைத் தமது இருப் பிடத்துக்கு இரண்டு வண்டிகளில் எடுத்துச் செல்வதுபோல அமைந் துள்ளது.

இது ஒரு சடங்கை உணர்த்து வதாகவோ, வேட்டையாடுதலை உணர்த்துவதாகவோ கூட இருக் கலாம். இதுவரை கிடைத்துள்ள தொல்பழங்கால ஓவியங்களைவிட, இதில் இரண்டு சக்கரங்களையும் வண்டியையும் தெளிவாக வேறுபடுத்தி அறியமுடிகிறது.

இது புதிய கற்கால, பெருங்கற் கால வேட்டை சமூக மக்களின் நாகரிக வளர்ச்சியைச் சுட்டும் முக்கிய ஆதாரம்” என்றார்.

மற்றொரு ஆய்வாளரான செல்வன் கூறுகையில், “இங்கே கிடைத்துள்ள பிற தடயங்களையும் கொண்டு பார்க்கும்போது, இங்கே கற்கால மனிதர்கள் முதல் பல்வேறு சமூகங்கள் இங்குள்ள குகை, குன்றுகளில் வாழ்ந்திருப்பதை அறியமுடிகிறது. மேலும் இப்பகுதியில் தேடினால் இன்னும் நிறைய வரலாற்றுத் தடயங்கள் கிடைக்கலாம்.

கல்குவாரிகளால் பல அரிய தொல்சின்னங்கள் அழிந்து போயிருக்கின்றன. இது அதில் தப்பி பிழைத்தது அதிர்ஷ்டவசமானது.

தொல்சின்னங்கள் மீது கவனம் கொண்டு அரசு காப்பாற்ற வேண்டும். பொதுமக்களுக்கும் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்பட் டால்தான் இவற்றைக் காப்பாற்ற முடியும்” என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

11 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்