பாரம்பரிய உணவே சிறந்தது: பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து

By செய்திப்பிரிவு

'மேகி' நூடுல்ஸ் சர்ச்சைக் குறித்து மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், "பாரம்பரிய உணவே நல்லது. அதையே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பழக்கப்படுத்த வேண்டும்" என்றார்.

நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார்.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான நெஸ்லே, இந்தியாவில் பல்வேறு உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அவற்றின் தயாரிப்புகளில் ஒன்றுதான் மேகி நூடுல்ஸ்.

இதில் மோனோசோடியம் குளூடாமேட் என்ற ரசாயன உப்பு அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகம் கலக்கப்பட்டுள்ளதாகவும் இது உடல் நலத்துக்குத் தீங்கானது என்றும் சமீபத்தில் செய்தி வெளியானது.

இதனையடுத்து, டெல்லியில் 15 நாட்களுக்கு 'மேகி' நூடுல்ஸ்க்கு தடை விதிக்கப்பட்டது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் மேகி நூடுல்ஸ் மாதிரியை ஆய்வுக்குட்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

51 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

15 hours ago

மேலும்