சிவில் நீதிபதி நேர்முகத் தேர்வு விவகாரம்: தேர்வாணையத்துக்கு எதிரான மனு தள்ளுபடி

By செய்திப்பிரிவு

சிவில் நீதிபதி தேர்வில் தங்களைவிட குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள் எனவே தங்களையும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்க வேண்டும் எனக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சிவில் நீதிபதி தேர்வில் தங்களைவிட குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்.

எனவே தங்களையும் நேர்முகத் தேர்விற்கு அழைக்க உத்தரவிடவேண்டும் என்று கோரி 39 தேர்வர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதியரசர்கள் ப.ராமசுப்ரமணியன் மற்றும் மதிவாணன் அடங்கிய பெஞ்ச் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஆவணங்களையும் பரிசீலனை செய்து தேர்வர்கள் அனைவரும் அவர்கள் பெற்ற அதிக மதிப்பெண்கள் அடிப்படையிலும் மற்றும் விதிகளின் அடிப்படையிலும் நேர்முகத் தேர்விற்கு சரியான முறையில் அழைக்கப்பட்டுள்ளார்கள் என்று கூறி அனைத்து ரிட் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

6 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வேலை வாய்ப்பு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்