காதல் திருமணம் செய்த ‘மாணவ’ ஜோடிக்கு ஹால் டிக்கெட் வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

காதல் திருமணம் செய்து கொண்ட பொறியியல் கல்லூரி மாணவனும் மாணவியும் தேர்வு எழுத அனு மதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பாச்சல் பாவை தொழில்நுட்பக் கல்லூரியில் பி.இ. (சிவில்) 2-ம் ஆண்டு படிக் கும் மாணவர் பாஸில். அதே வகுப்பு மாணவி பிரதீபா. வெவ் வேறு மதங்களைச் சேர்ந்த இருவ ரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர்.

தேர்வுக்கு விண்ணப்பம்

இந்நிலையில், செமஸ்டர் தேர்வு கடந்த 18-ம் தேதி தொடங்கியது. தேர்வு எழுதுவதற்காக அவர்கள் இருவரும் முன்கூட்டியே விண்ணப் பித்திருந்தனர். ஆனால், அவர் களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப் படவில்லை. கல்லூரி நிர்வாகத்தில் விசாரித்தும் முறை யான தகவல் கிடைக்காததால், இரு வரும் சென்னை உயர் நீதிமன் றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

நீதிபதி எஸ்.மணிகுமார் முன்பு இந்த மனுக்கள் கடந்த 14-ம் தேதி விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கருத்தை அறிந்து தெரிவிக்குமாறு பல்கலைக்கழக வழக்கறிஞர் வி.சண்முக சுந்தருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

அண்ணா பல்கலை. ஒப்புதல்

இந்த வழக்கு மீண்டும் கடந்த 15-ம் தேதி விசாரணைக்கு வந் தது. அண்ணா பல்கலைக்கழக தேர் வுக் கட்டுப்பாட்டாளர் எழுதிய கடி தத்தை வழக்கறிஞர் சண்முக சுந்தர் சமர்ப்பித்தார்.

‘‘மனுதாரர்களான மாணவர்கள் பாஸில், பிரதீபா இருவரும் அனைத்து வேலை நாட்களும் கல்லூரிக்கு வந்திருக் கின்றனர். அவர்களுக்கு 100 சதவீத வருகைப் பதிவு உள் ளது. 4-வது செமஸ்டர் தேர்வு எழுத அவர்களுக்கு முழு தகுதி யும் உள்ளது. எனவே, கல்லூரி முதல்வரிடம் இருந்து ஹால் டிக்கெட் பெற்று அவர்கள் இரு வரும் தேர்வு எழுதலாம்’’ என்று அதில் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் கூறியிருந்தார்.

இதையடுத்து, ‘‘மனுதாரர்கள் இருவரும் கல்லூரி முதல்வரை அணுகி ஹால் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்’’ என்று நீதிபதி உத்தர விட்டார். மேலும், ‘‘நீதிமன்றத்தின் இந்த உத்தரவை நிறைவேற்றும்படி கல்லூரி முதல்வருக்கு பல்கலைக் கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும்’’ என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

இந்தியா

14 mins ago

தமிழகம்

35 mins ago

சினிமா

31 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

55 mins ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்