ஓடைக்குள் கவிழ்ந்த கேரள பஸ் 30 பயணிகள் படுகாயம்

By செய்திப்பிரிவு

கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் இருந்து பழநி வழியாக, தனியார் ஆம்னி பஸ் மதுரைக்கு தினசரி சென்று வருகிறது. நேற்று அதிகாலை 4 மணிக்கு வழக்கம் போல, இந்த பஸ் பழநி அருகே பழநி - திண்டுக்கல் நெடுஞ்சாலை யில் வந்து கொண்டிருந்தது. நத்தத்தைச் சேர்ந்த ஓட்டுநர் செல்வராஜ்(41) பஸ்ஸை இயக் கினார். கணக்கன்பட்டியில் நல்லதங்காள் ஓடை மேம்பாலத் தில் வந்தபோது, திடீரென பிரேக் பழுதடைந்து தாறுமாறாக ஓடியுள்ளது. ஒரு கட்டத்தில் ஓட்டு நரின் கட்டுப்பாட்டை மீறி, பாலத்தில் இருந்து நல்லதங்காள் ஓடைக்குள் பஸ் தலைகுப்புறக் கவிழ்ந்தது. பஸ்ஸில் இருந்த 30 பயணிகள் ஆழ்ந்த உறக்கத் தில் இருந்தனர். பஸ் விபத்துக்குள் ளானதும் படுகாயமடைந்திருந்த பயணிகள் கூச்சலிட்டனர்.

அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், இடிபாடுகளில் சிக்கியிருந்த பயணிகளை காப்பாற்றி தகவல் தெரிவித்தனர். போலீஸார் விரைந்து வந்து காயமடைந்திருந்த பயணி களை மீட்டு, பழநி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

6 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வேலை வாய்ப்பு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்