வாஞ்சியின் உடலை ஆங்கிலேயர்கள் என்ன செய்தார்கள்? - ஆதாரங்களை ஆவணப்படுத்த கோரிக்கை

By அ.அருள்தாசன், ரெ.ஜாய்சன்

ஜூன் 17 - இன்று - வாஞ்சிநாதன் நினைவு நாள்

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராடிய வாஞ்சிநாதனின் இறுதி முடிவு குறித்த பல்வேறு தகவல்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ள நிலை யில், அவரது உடலை ஆங்கிலே யர்கள் என்ன செய்தார்கள் என்பதற் கான விடை இத்தனை ஆண்டு களாகியும் கிடைக்கவில்லை. இது குறித்த வரலாற்று ஆதாரங்களை திரட்டி ஆவணப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை இப்போது வலுப்பெற்றுள்ளது.

ஆங்கிலேய அரசை எதிர்த்து நாடெங்கும் விடுதலைப் போராட்டம் உச்சகட்ட நிலையிலிருந்தபோது, திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் 1886-ம் ஆண்டு பிறந்த வாஞ்சிநாதனும் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமானார். இந்தியர்கள் நடத்திவந்த `சுதேசி ஸ்டீம் நேவிகேஷன்’ நிறுவனத்தை இந்தியர்கள் நடத்த கூடாதென்று தடுத்தது வெள்ளையர் அரசாங்கம். இதற்காகப் பாடுபட்டு வந்த வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தது.

இக்காரணங்களால் திருநெல் வேலி கலெக்டராக அப்போதிருந்த ஆஷ் துரையை கொல்ல, வாஞ்சி முடிவு செய்தார். 1911 ஜூன் 17 காலை 10.35 மணிக்கு மணியாச்சி ரயில் நிலையத்தில் கலெக்டர் ஆஷ் துரை, தனது மனைவியோடு கொடைக்கானலுக்குச் செல்ல ரயிலில் முதல் வகுப்புப் பெட்டி யில் அமர்ந்திருந்தபோது, அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக் கொண்டு வாஞ்சிநாதன் வீரமரணம் அடைந்தார்.

சரக்கு ரயிலில் உடல்

வாஞ்சியின் உடலையும், காய மடைந்த ஆஷ் துரையையும் அவ் வழியாக வந்த சரக்கு ரயிலில் ஏற்றி திருநெல்வேலிக்கு கொண்டுவந்த னர். கங்கைகொண்டான் பகுதிக்கு வந்தபோது ஆஷ்துரை உயிரிழந்தார். வாஞ்சியின் உடல் திருநெல்வேலி சந்திப்பு பாலம் போலீஸ் நிலையத்தில் இரு நாட்கள் வைக்கப்பட்டிருந்ததாக வரலாற்று குறிப்புகளில் தெரிவிக்கப்படுகிறது.

ஆஷ் துரையின் உடல் பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் இங்கிலீஷ் சர்ச் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப் பட்டது. தற்போதும் இந்த கல்லறை நினைவிடமாக காட்சியளிக்கிறது. ஆனால் வாஞ்சியின் உடல் இறுதியில் என்ன செய்யப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் இதுவரை இல்லை.

பேரன் கோரிக்கை

இதுகுறித்து வாஞ்சிநாதனின் தம்பி கோபாலகிருஷ்ணனின் பேரன் வாஞ்சி கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: வாஞ்சிநாதன் செங் கோட்டையில் உள்ள பள்ளியில் படித்தது, பின்னர் பி.ஏ. படித்தது, தொடர்ந்து வனத்துறையில் பணி யாற்றியது குறித்தெல்லாம் தகவல் கள் கிடைத்திருக்கின்றன. ஆனால், அவரது இறுதி முடிவு குறித்து தெரிய வரவில்லை. அது குறித்த ஆய்வு களை மேற்கொண்டு ஆவணப் படுத்த வேண்டும்’ என்றார் அவர்.

வாஞ்சி இயக்க நிறுவன தலை வர் பி.ராமநாதன் கூறும்போது, “வாஞ்சியின் உடல் என்ன செய்யப் பட்டது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அவரது உடல் எரிக்கப்பட்டு இருந்தால் அந்த இடத்தை கண்டறிந்து அதை ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் அவர்.

முதல் உலகப் போரில் பங்கேற்ற இந்திய வீரர்கள் 250 பேரை ஆங்கி லேயர்கள் கொன்று பஞ்சாப் மாநிலம் அஜ்நால் பகுதியிலுள்ள கிணற்றில் வீசியதை 157 ஆண்டு களுக்குப் பின் கடந்த ஆண்டு கண்டறிந்து மரியாதை செலுத்தப் பட்டுள்ளது. இதுபோல் வாஞ்சியின் உடல் என்ன செய்யப்பட்டது என் பதை கண்டறிய வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் வரலாற்று ஆய்வாளர் திவான் போன்றவர் களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு சார்பில் அஞ்சலி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் கூறும்போது, `மணி யாச்சி ரயில் நிலையத்தில் இந்த ஆண்டும் வாஞ்சிநாதனுக்கு அரசு சார்பில் அஞ்சலி செலுத்தப்படும். இது தொடர்பாக ரயில்வே நிர்வாகத் திடம் பேசி அனுமதி பெறப்பட் டுள்ளது. ரயில் நிலையத்தில் நினைவு சின்னம் அமைக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது’ என்றார் ஆட்சியர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்