மத்திய அரசின் முடிவுக்கு மருந்து வணிகர்கள் எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

மருந்து விற்பனை கடைகளில் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களை விற்பனை செய்ய கூடாது என்ற மத்திய அரசின் முடிவு சரியானதல்ல. இதனை நடைமுறைப்படுத்தினால் தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க மாநிலத் தலைவர் செல்வன் தெரிவித்துள்ளார்.

எதிர்ப்பை காட்டுவோம்

தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க மாநிலத் தலைவர் செல்வன் கூறியதாவது:

மத்திய அரசின் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது. மத்திய அமைச்சர் இது போன்ற அறிவிப்பை வெளியிட்டால் உடனடியாக தமிழகம் முழுவதும் உள்ள 7 லட்சம் மருந்து கடைகளை மூடி எங்கள் எதிர்ப்பை காட்டுவோம். குழந்தைகளுக்காக தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை மருந்து கடைகளில் விற்பதுதான் பாதுகாப்பானது. உணவுப்பொருட்களை தயாரிக்கும் இடத்திலேயே சரியான ஆய்வு மேற்கொண்டு விற்பனைக்கு அனுப்புவதுதான் நியாயமா னது.

ஆன்-லைன் வர்த்தகம்

மீண்டும் ஆன் லைன் வர்த்தகத்தில் மருந்து பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், மருந்து விற்பனையை நம்பியுள்ள லட்சக்கணக்கானோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஆன் லைன் வர்த்தகத்தின் மூலம் மருந்து விற்பனை செய்வதால் தேவையற்ற மருந்துகளை இளைஞர்கள் எளிதாக பெற்று அதை பயன்படுத்தி பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள். இதை உணர்ந்து ஆன்-லைன் வர்த்தகத்தில் மருந்து விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கார்ட்டூன்

2 hours ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

உலகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

சினிமா

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்