கள்ளநோட்டை மாற்ற முயன்றவர் கைது

By செய்திப்பிரிவு

மேற்குவங்கம் மாநிலத்தைச் சேர்ந்தவர் அக்தர்ஹுசேன்(25). இவர் மதுராந்தகம் பகுதியில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் உள்ள பேன்ஸி ஸ்டோரில் ரூ.230-க்கு பொருட்களை வாங்கிவிட்டு கடைக் காரரிடம் ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்தார். சந்தேகமடைந்த கடைக்காரர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். போலீஸார் வந்து அவரை கைது செய்து விசாரித்தனர்.

இதில் செங்கல்பட்டு பகுதியில் இதற்காக தனி கும்பல் ஒன்று செயல்பட்டு வருவதாகவும். ரூ.500 நல்ல நோட்டு அளித்தால், ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டு வழங்குவார்கள் என அக்தர்ஹீசேன் வாக்கு மூலம் அளித்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

பின்னர் அவர் மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அந்த நபர் இதேபோல் 3 முறை பொருட்களை வாங்கிவிட்டு, ஆயிரம் ரூபாய் நோட்டு கொடுத்து ஏமாற்றியதாகவும் இந்நிலையில் தான் அந்த நபர் மீண்டும் கடைக்கு வந்தவுடன் போலீ ஸாருக்கு தகவல் தெரிவித்து பிடித்துக் கொடுத்ததாக கடைக் காரர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

22 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

9 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்